இத்தேர்தல் வெற்றி பார்லிமென்ட் தேர்தலில் பிரதிபலிக்காது: கார்த்தி சிதம்பரம் ‘கன்ஃபார்ம்’!

இத்தேர்தல் வெற்றி பார்லிமென்ட் தேர்தலில் பிரதிபலிக்காது: கார்த்தி சிதம்பரம் ‘கன்ஃபார்ம்’!

Share it if you like it

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றியை வைத்து பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெறுவோமா என்பதை சொல்ல முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த மிகப்பெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எனினும், என்னை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலுடைய முடிவை வைத்து பார்லிமென்ட் தேர்தல் முடிவு அமையும் என்று சொல்ல மாட்டேன். இதை வைத்து மற்ற மாநிலங்கள் அல்லது மத்திய மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள்களிலும் இதே முடிவு இருக்கும் என்று சொல்லத் தயாராக இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த வெற்றி பார்லிமென்ட் தேர்தலில் பிரதிபலிக்காது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே கார்த்தி சிதம்பரம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, இணையத்தில் எண் கணித விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தவர் கார்த்தி. இதனால், கடைசியாக பார்லிமென்ட் வளாகத்துக்கு வந்த ராகுல் காந்தி, கார்த்தியை கண்டுகொள்ளாமல் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இப்படியொரு கருத்தைச் சொல்லி, காங்கிரஸ் கட்சியினரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it