கருணாநிதி பேனா சிலை: காங். அழகிரி சர்ச்சை பேச்சு!

கருணாநிதி பேனா சிலை: காங். அழகிரி சர்ச்சை பேச்சு!

Share it if you like it

கருணாநிதியின் பேனா சிலை வைப்பதை எதிர்ப்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், கருணாநிதி பயன்படுத்திய பேனாவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்து, அறிவித்தது. இதற்காக 81 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 134 அடி உயரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கடலுக்கு நடுவே இப்பேனா சின்னம் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக மாவட்ட மர்றும் மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியை கோரியிருக்கிறது.

ஆனால், இதற்கு தமிழக மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. ஏற்கெனவே மக்களின் வரிப்பணத்தை வீணடித்து திருச்சியில் 100 கோடி ரூபாய் செலவில் பெரியார் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க, மக்கள் வரிப்பணத்தை மேலும் வீணடிக்கும் விதமாக, கருணாநிதியின் பேனாவுக்கெல்லாம் சிலை வைக்க வேண்டுமா என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், கருணாநிதி பேனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருக்கிறார். இவரது இப்பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், கருணாநிதி ஒரு தெலுங்கரே தவிர, தமிழர் கிடையாது. அப்படி இருக்க, தெலுங்கரான கருணாநிதியின் பேனா சிலைக்காக தமிழர்களின் டி.என்.ஏ.வை எதற்காக பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும், தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஏற்கெனவே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க, அவரது பேனாவுக்கு சிலை எதற்கு? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்களின் வரிப்பணம் ஒரு குறிப்பிட்ட தனி நபருக்காக செலவிடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கருத்துக் கூறி வருவதோடு, அழகிரியின் இப்பேச்சுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க.காரன் கூட இப்படி முட்டுக் கொடுக்கவில்லை. கிடைக்கிற 25 சீட்டுக்கு இந்த முட்டா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Share it if you like it