கள்ள சாராயத்தால் மூன்று பேர் பலியான சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கோவன் பேசுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர் பாடகர் கோவன். இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை பாடி புகழ் பெற்றவர். மேலும், அன்றைய அ.தி.மு.க. அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் சீண்டும் வகையில் அப்பாடல் அமைந்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க. கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஆட்சியில் பாட்டு பாடிய கோவன் தற்போது எங்கே? இருக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.