தமிழகத்தில் ஃபாரின் கலாசாரம் தீயாய் பரவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகம் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழகம் மிகவும் பழமையான கலாசாரத்தைக் கொண்டது என்பது நாம் அறிந்ததே. இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல, தமிழர்களின் கலாசாரமும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாகவே விளங்கி வருகிறது. உதாரணமாக, இயற்கை முதல் விலங்குகள் வரை தெய்வமாக வணக்கம் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. மேலும், பெண்களையும் கடவுளாக வணங்கும் நடைமுறையும் தமிழகத்தில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், திராவிட கொள்கை மற்றும் கோட்பாடுகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது. கள்ளக்காதலுக்கு திருமணம் கடந்த உறவு என்று பெயர் வைத்துக் கொண்டு திராவிட கும்பல் செய்யும் அட்டூழியம் கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமா, வெளிநாட்டில் வசிக்கும் திராவிட கும்பல் ஃபாரின் கலாசாரத்தை கொண்டு வந்து தமிழகத்தில் புகுத்தி வருகிறார்கள். இதனால், தமிழகத்தில் திராவிட சீரழிவு தீயாய் பரவி வருகிறது. அந்த வகையில், தமிழகம் கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது.
அந்தக் கணொளியில், நடுரோட்டில் பூங்கொத்து கொடுத்து தங்களது காதலை புரொபோஸ் பண்ணுவதும், பிறகு கொஞ்சம்கூட கூச்ச நாச்சமே இல்லாமல் நடுரோட்டிலேயே கட்டி அணைப்பதும்… அடச்சீ… என்று காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது இக்காணொளி…