பழமையான மொழி தமிழா… சமஸ்கிருதமா..? உ.பி.ஸ்களை தொடர்ந்து கதறவிடும் கவர்னர்!

பழமையான மொழி தமிழா… சமஸ்கிருதமா..? உ.பி.ஸ்களை தொடர்ந்து கதறவிடும் கவர்னர்!

Share it if you like it

உலகில் பழமையான மொழி தமிழா, சமஸ்கிருதமா என்கிற விவாதம் நீண்டகாலமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்னும் முடிவு கிடைக்கவில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். இதனால், திராவிட கும்பல்கள் கதறிக் கொண்டிருக்கின்றன.

தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் ஆரம்பம் காலம் முதலே முட்டலும் மோதலுமாக இருந்து வருகிறது. கவர்னர் பேசுவதற்கெல்லாம் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர் தி.மு.க.வினர். அதேபோல, சட்டமன்றத்தில் தி.மு.க. தலைமை எழுதிக் கொடுத்த புகழ்ச்சி உரையை கவர்னர் படிக்காமல் தவிர்த்து விட்டார். இதனால், கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கூத்தெல்லாம் அரங்கேறியது. ஆனாலும், கவர்னர் அசராமல் அடித்து ஆடி வருகிறார். தமிழ்நாடா, தமிழகமா என்று எழுப்பிய கேள்வி தி.மு.க.வினரை கதிகலங்க வைத்ததெல்லாம் தனிக்கதை.

இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்கிற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தறது. இந்நிகழ்ச்சியில், பீஹார் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், “பாரதம் என்பது 1947-ம் ஆண்டு உருவானதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும். பாரதம் உருவாகி 2,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பாரத நாடு என்பது கலாசாரம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் உருவானது.

தமிழ் மொழியையும், சமஸ்கிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுகிறார்கள். இதில் எது பழமையான மொழி என்பதற்கு தற்போது விடையும், முடிவும் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமஸ்கிருதமா? இல்லை தமிழா? என்கிற விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜாக்கள் ஆண்ட காலத்தில் இருந்தே யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்கிற சூழல் இருந்து வந்தது. அந்த வகையில், தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்திருக்கின்றன. அதேபோல, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கும் பல்வேறு சொற்கள் வந்திருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துதான் திராவிட கும்பலை கதற வைத்திருக்கிறது. கவர்னர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


Share it if you like it