மண்டைக்காடு கோயில் திருவிழா: பணிந்தது தி.மு.க. அரசு!

மண்டைக்காடு கோயில் திருவிழா: பணிந்தது தி.மு.க. அரசு!

Share it if you like it

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் சமய மாநாடு நடத்துவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில், ஹைந்தவ சேவா சங்கமே திருவிழாவை நடத்தும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஹிந்துக்களின் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்திருக்கிறது.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழா மிகவும் புகழ்பெற்றது. நிகழாண்டு இத்திருவிழா மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது. இக்கோயில் திருவிழாவின்போது, ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் ஹிந்து சமய மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 86 ஆண்டுகளாக இம்மாநாடு நடந்து வரும் நிலையில், நிகழாண்டு சமய மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் என்று ஹிந்து விரோத தி.மு.க. அரசு அறிவித்தது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாநாடு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அழைப்பிதழ் அச்சிட்ட நிலையில், அதற்குப் போட்டியாக ஹைந்தவ சேவா சங்கம் சார்பிலும் மாநாட்டு அழைப்பிதழ் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து, பரபரப்பை ஏற்பட்டது. இந்த சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு, சுவாமி தரிசனம் செய்த அவர், கோயில் திருப்பணிகளையும், சமய மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர், குமாரகோயில் வேளிமலை முருகன் கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா மார்ச் 5-ம் தேதிதான் தொடங்குகிறது. சமய மாநாடு பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினருடன் அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இப்பிரச்சினை சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து, மண்டைக்காடு சமய மாநாடு தொடர்பாக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை 11.30 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க அமைப்பினருடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். மதியம் 1.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையை முடித்து வெளியேறினர். பின்னர், மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மண்டைக்காட்டில் வழக்கம்போல் ஹைந்தவ சேவா சங்கமே இந்து சமய மாநாட்டை நடத்தும் என்றும், இதில் இந்து அறநிலையத்துறை இணைந்து செயல்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it