‘மீ டூ’ புகழ் வைரமுத்துவை வதம் செய்யும் ‘முட்டிப்போடு முட்டிப்போடு’ பாடல்!

‘மீ டூ’ புகழ் வைரமுத்துவை வதம் செய்யும் ‘முட்டிப்போடு முட்டிப்போடு’ பாடல்!

Share it if you like it

பாடகி சின்மயி, ‘மீ டு’ புகழ் வைரமுத்துவை பற்றி மீண்டும் கிளப்பிவிடவே, நெட்டிசன்கள் பாடல் போட்டு வைரமுத்துவை வதம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரான வைரமுத்து மீது 19 பாலியல் புகார்கள் இருப்பதாகவும், அவர் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதோடு, முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராக இருப்பதால், அவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதையடுத்து, ஏற்கெனவே வைரமுத்து மீது ‘மீ டூ’வில் புகார் தெரிவித்திருந்த பாடகி சின்மயி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த விவகாரம் பெரியளவில் பேசுபொருளாகி விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், வைரமுத்துவை வதம் செய்யும் விதமாக நெட்டிசன்கள் ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, நடிகர் திலகம் பிரபு, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான ‘டூயட்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மெட்டுப்போடு, மெட்டுப்போடு’ என்ற பாடலை, ரீமிக்ஸ் செய்து, ‘முட்டிப்போடு முட்டிப்போடு’ என்று பாடல் வரிகளை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில், ஹைலைட் என்னவென்றால், ‘வைரமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு, ஒரு வழக்கிருக்குது வழுக்கிருக்குது முட்டிப்போடு… எத்தனை பிழைகள் கண்டோம் எத்தனை எத்தனை கறைகள் கண்டோம், அத்தனையும் பேனாக்குள்ளே சுருட்டிப்போடு… சீமைப்பால் கதைகள் சாக்கடைகள் வெட்கக்கேடு, உன் கற்பனைக்குண்டு காமனுக்கில்லை கட்டுப்பாடு… உன் வன்மப் பேச்சு தன் மானம் போச்சு, மை பேனாவால் பெண்கள் வாழ்க்கை போச்சு’ என்று வைரமுத்துவை வச்சு செய்திருக்கிறார்கள்.

இப்பாடலை முழுவதுமாகக் காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it