மூக்கில் ட்யூப்போடு பட்ஜெட் தாக்கல் செய்த மனோகர் பாரிக்கர் இதைப் பார்த்தாவது திருந்துவாரா நிதியமைச்சர்..!

மூக்கில் ட்யூப்போடு பட்ஜெட் தாக்கல் செய்த மனோகர் பாரிக்கர் இதைப் பார்த்தாவது திருந்துவாரா நிதியமைச்சர்..!

Share it if you like it

தம்மை தேர்ந்தெடுத்த கோவா மக்களுக்குகாக தனது இறுதி மூச்சு உள்ள வரை உழைப்பேன் என்று தனது இறுதி நாளிலும் கூட அம்மாநில மக்களுக்காக உழைத்தவர் மறைந்த முன்னாள் கோவா முதல்வர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் தமிழகத்தின் நிலையோ முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது என்பது கசப்பான உண்மை. தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கும் அவரின் புதல்வருக்கும் ஐஸ் வைப்பதிலேயே தங்கள் பொன்னா நேரத்தை விரயம் செய்வதிலும், மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரமால் தங்கள் மனம் போன போக்கில் பேசி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையும் எற்படுத்தி வருவது ஒருபுறம் என்றால்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மிக முக்கிய கூட்டமான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவர் அளித்த விளக்கம் மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தனது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மூக்கில் ட்யூப் பொருத்தப்பட்ட நிலையிலும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் மக்கள் பணியே முக்கியம் என்று கோவா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த மனோஹர் பாரிக்கர் எங்கே? GST மீட்டிங்கை புறக்கணிச்சுட்டு வளைகாப்புன்னு சொல்லி கொண்டு திரியும் இவர் எங்கே? தனது வாழ்நாளை எண்ணி கொண்டு இருந்தாலும் மக்களுக்காக உழைத்து மறைந்த மனோகர் பாரிக்கரை பார்த்தாவது தமிழக அமைச்சர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

/

Share it if you like it