ஓசி பஸ் என்று கூறியது முதல் நீ எனக்கு ஓட்டுப் போட்டியா என்று கேட்டது வரை அமைச்சர் பொன்முடியை தனியார் ஊடகம் வச்சு செய்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திமு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அமைச்சர் பொன்முடியின் பேச்சு எக்குத்தப்பாகவே இருந்து வருகிறது. பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதை ஓசி பஸ் என்று கிண்டல் செய்தார். அதேபோல, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சேர்மன் ஒருவரை ஏம்மா நீ எஸ்.சி.தானே என்று கேட்டார். சட்டமன்றத்தில் எதிர் கேள்வி கேட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை யோவ் பேசாம உட்காருய்யா என்று ஆவேசமாகக் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆஸ்பத்திரி கட்டிக் கொடுக்கும்படி கேட்ட பொதுமக்களிடம் நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று எகத்தாளமாகக் கேட்டார்.
அமைச்சர் பொன்முடியின் இதுபோன்ற அராஜக போக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், பொன்முடியின் ஒட்டுமொத்த செயல்களையும் வைத்து கிண்டல் செய்து தனியார் ஊடகம் ஒன்று வீடியோ வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை நீங்களும் பார்த்து சிரிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…