சென்னை ஐ.சி.எஃப்- முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில் உட்பட 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, 2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில், சிலவற்றில் 8 பெட்டிகள் கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 4 பெட்டிகளில் மோட்டார் வாகனம் பொருத்தப்படும். சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். ரயில் ஓட்டுநர் அறை நவீன முறையில் வடிவமைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் முதல் வந்தே பாரத் ரயில் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.