பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புக்களையும் தொடர்ந்து பெருமையாக பேசி வருகிறார்.. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தமிழ் மீது வைத்துள்ள அன்பை காட்டிலும் இருமடங்காக பிரதமர் மோடி தமிழ் மொழி அதிகம் வைத்து உள்ளார் என்பது நிதர்சனம்.
’யாதும் ஊறே’ யாவரும் கேளிர்’, பாரதியார் கவிதைகள், புறநானுற்றில் இருந்து எடுத்துக்காட்டு, ஒளவையார் பொன்மொழிகள், உட்பட எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் இந்த அளவிற்கு தமிழ் மொழி மீது காதல் கொண்டு இருக்க முடியாது. தமிழ் தமிழ் என்று பேசி அப்பாவி மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் துண்டு சீட்டு தலைவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி வித்தியாசமானவர் என்பது நிதர்சனம்.
சாதாரண கட்சி தொண்டராக, தலைவராக, முதல்வராக, தற்பொழுது பிரதமராக என பலமுறை மோடி தமிழகம் வந்துள்ளார். மோடி தமிழ் மொழி குறித்து எல்லாம் பேசிய அனைத்தையும் தொகுத்து ’வணக்கம் தமிழகம் பிரதமரின் தமிழ் முழக்கம்’ என்னும் புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தை தொகுத்து எழுதியவர்கள்;
பேராசிரியர் அமர் பிரசாத் ரெட்டி, காஷ்யப் வெங்கடேஷ், H.சந்தோஷ், கோகுல் SG, கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த், லோகேந்திரன், சத்தியநாராயணன், ஷஜித் லோகேஷ்வரன், ஷெஃபாலி வைத்யா, சோனாலி முரளி, வினோத்ஸ்ரீராம்..
Blue Ocean Books & Akhanda Tamil Ulagam இப்புத்தகத்தை வெளியிட்ட உள்ளது.
காணொளி வாயிலாக சுற்றுசூழல், வனத்துறையின், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் சி.டி. ரவி அவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி மற்றும் பல மூத்த தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.