இசைஞானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்!

இசைஞானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்!

Share it if you like it

இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோதி.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இளைய ராஜா. இவருக்கு, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. தனது இசையின் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். மேலும், தமிழக மக்களின் அன்பையும், ஆதரவினையும் பெற்றவர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு, சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டது. இப்புத்தகத்திற்கு, இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், “அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல, அவரது கருத்தை அமல்படுத்துபவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும், சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயல்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

இளைய ராஜாவின் இந்த கருத்தினை பலர் வரவேற்று இருந்தனர். இதுதவிர, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாற்று கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இசைஞானியின் கருத்தை வரவேற்று இருந்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தி.க மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இளைய ராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே!! என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இசைஞானிக்கு தமது முழு ஆதரவினை வழங்கி இருந்தார்.

இதையடுத்து, எனது கருத்தில் உறுதியாக நிற்கிறேன் அதனை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன் என தனது தம்பியின் மூலமாக தனது எண்ணத்தை ஊடகங்களுக்கு இசைஞானி உறுதியாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமது புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜாவிற்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், உ.பிஸ்கள் மற்றும் சில்லறை போராளிகள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it