பாடல்களில் கிறிஸ்தவம்… மறைமுகமாக புகுத்திய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்… குட்டு அம்பலம்!

பாடல்களில் கிறிஸ்தவம்… மறைமுகமாக புகுத்திய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்… குட்டு அம்பலம்!

Share it if you like it

தான் இசையமைத்த பாடல்களில் மறைமுகமாக கிறிஸ்தவத்தை புகுத்தியதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் பிளேயராக இருந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். பிற்காலத்தில் தனி இசையமைப்பாளராக உருவெடுத்தார். அதேபோல, ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீபோர்ட் பிளேயராக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தற்போது தனி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில், 1999-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்தார். எனினும், இப்படத்திற்கான பாடல்களை கம்போசிங் செய்தது கீபோர்ட் பிளேயரான ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முதல்வனே என்கிற பாடலை முழுக்க முழுக்க கம்போசிங் செய்தது ஹாரிஸ் ஜெயராஜ்தானாம்.

இப்பாடலின் தொடக்கத்தில் ஹம்மிங் ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த ஹம்மிங் ஹா…. லே…. லூ….யா… என்று இருக்கும். இதில்தான் ஹாரிஸ் ஜெயராஜ் மறைமுகமாக கிறிஸ்தவத்தை புகுத்தி இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, அல்லேலூயா என்பதை தனித்தனி எழுத்துக்களாக பிரித்து, ஹா… லே…. லூ… யா… என்று ஹம்மிங் செய்திருக்கிறார் என்கிறார்கள். இதை ஹாரிஸ் ஜெயராஜே தன்னிடம் சொன்னதாக திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார். இப்பாடல் மட்டுமல்ல, தான் இசையமைத்த அனைத்து பாடல்களிலும் மறைமுகமாக கிறிஸ்தவத்தை புகுத்தி இருக்கிறாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it