பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். செய்வதை விட தி.மு.க. தீவிரமாக செய்கிறது: பிரபல அரசியல் விமர்சகர் கருத்து

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். செய்வதை விட தி.மு.க. தீவிரமாக செய்கிறது: பிரபல அரசியல் விமர்சகர் கருத்து

Share it if you like it

ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கி தருவதில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். விட தி.மு.க. தீவிரமாக செய்து வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீநிவாசன் நியூஸ்-18 ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர், ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர்.

இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் செந்தில்குமார். இவர், ஹிந்துக்களின் பூஜை முறைகளையும், அவர்களின் உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டு இருக்கிறார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஹிந்து சமய அறநிலையத்துறையை மிக கடுமையாக சாடி இருந்தார். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் நூலகம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. வழக்கம்போல, தொகுதி எம்.பி. என்கிற முறையில் இந்நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் அழைக்கப்பட்டு இருந்தார். அவரும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது, பூமிபூஜைக்காக மஞ்சள், குங்குமம் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை, செந்தில்குமார் காலால் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறியவர், ஒருமுறை சொன்னால் உங்களுக்கெல்லாம் புரியாதா? ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? இனி நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இதுபோல சடங்கு சம்பிரதாயங்கள் செய்தால் அவ்வளவுதான் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மிரட்டிய சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஹிந்துக்கள் குறித்து பேசிய அருவருக்கதக்க பேச்சை நாடே நன்கு அறியும். இப்படியாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலினில் தொடங்கி அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரை ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து காயப்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக, தி.மு.க.வின் மீது ஹிந்துக்கள் கடும் கோவத்தில் உள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க.விற்கு ஆதரவான ஹிந்து வாக்கு வங்கி மெல்ல மெல்ல தற்போது தமிழகத்தில் உருவாகி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஊடகமான நியூஸ்-18 பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து ஊடக விவாதம் ஒன்றினை நடத்தி இருந்தது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீநிவாசன், ஹிந்து வாக்கு வங்கி தமிழகத்தில் உருவாகி வருவதற்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், முயற்சி செய்து வருவதை விட தி.மு.க. மிக தீவிரமாக செயல்படுத்த முயன்று வருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it