ராகுல் காந்தியின் செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க கூடிய சூழ்நிலை அக்கட்சியில் தற்பொழுது மெல்ல மெல்ல எழுந்து வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராகுல் காந்தி மீது தற்பொழுது கடும் கோபத்தில் உள்ளார் என்கிற செய்தி வெளிவர துவங்கியுள்ளது.. வேளாண் சட்டத்தில் ராகுல் காந்தியின் அணுகுமுறைக்கு பஞ்சாப் முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
விவசாயிகளின் போராட்டத்தை மையமாக வைத்து.. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் மீண்டும் பஞ்சாப்பில் தலைதுாக்கி இருப்பதால், அதற்கு உடனே தீர்வு காணும் படியும், விவசாயிகள் பிரச்னைகளுக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கும் விதமாகவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா-விடம்… பஞ்சாப் முதல்வர் தினமும் தொலைபேசியில் பேசி வருவதாகவும்… விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..