ராகுல் காந்தி மீது சாவர்க்கர் பேரன் அவதூறு வழக்கு!

ராகுல் காந்தி மீது சாவர்க்கர் பேரன் அவதூறு வழக்கு!

Share it if you like it

சாவர்க்கர் குறித்து பேசியதற்காக மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி என்ற குடும்பப் பெயர் உள்ள அனைவரும் திருடர்களாக இருப்பது ஏன் என்று கூறியிருந்தார். இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்துவதாக இருப்பதாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்.பி. பதவியும் பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்திருக்கிறார்.

இந்த நிலையில், மோடி சமூகம் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அச்சமூகத்தினரும், பா.ஜ.க.வினரும் வலியுறுத்தனர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் காந்தி என்று கூறியிருந்தார். இது சாவர்க்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக, அவரது பேரன் சாத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிர மாநிலம் புனே கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சாவர்க்கர் பேரன் கூறுகையில், “இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி அங்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர் ஒருவரை சாவர்க்கர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து அடித்து சந்தோஷப்பட்டார் என்று இல்லாத கற்பனை விஷயங்களை பேசினார். அடிப்படை ஆதரமில்லாமல் இவ்வாறு பேசுவது எங்களை புண்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it