தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள், பேசிய கூலிப் பணத்தை பெறுவதற்கு முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண்கள் கால்வாய்க்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாஸ் காட்டுவதற்காக ஆண்களுக்கு தலைக்கு 500 ரூபாய் மற்றும் குவார்ட்டர், பெண்களுக்கு தலைக்கு 500 ரூபாய் பிளஸ் உணவு என்று பேசி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்களை அழைத்து வந்திருந்தனர்.
இதற்காக தலைக்கு ஒரு டோக்கனும் வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் மேடையின் முன்புறம் வைத்து டோக்கன் முறையில் பணப் பட்டுவாடா நடந்தது. அப்போது, பணம் பெறுவதற்கு போட்டா போட்டி ஏற்பட்டு மக்கள் முண்டியடித்தனர். இதனால், அப்பகுதியே களேபரமாக மாறியது. ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி தெருவோரம் இருந்த கழிவுநீர் கால்வாயினுள் பெண்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உயிர்ப்பலி ஏற்படாதவரை நல்லதுதான்…