ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் தேதி மாற்றம் !

ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் தேதி மாற்றம் !

Share it if you like it

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மிசோரம், சட்டிஸ்கர்,மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது. அதில் மிசோரம் மாநிலத்துக்கு 7 ஆம் தேதியும்,சட்டிஸ்கர் மாநிலத்துக்கு 7 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதியும்,மத்திய பிரதேசத்துக்கு 17 ஆம் தேதியும், ராஜஸ்தானுக்கு 23 ஆம் தேதியும், தெலங்கானாவுக்கு 30 ஆம் தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. அதாவது 23 ஆம் தேதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 25 ஆம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 23 ஆம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு ஊடக தளங்கள், 23 அன்று பெரிய அளவிலான திருமணம்/சமூக நிச்சயதார்த்தம் நடைபெறும். இதனால் தேர்தலின் போது வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும், அதனால் தேர்தல் தேதியை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கருத்தில்கொண்டு ராஜஸ்தானுக்கு மட்டும் 25 ஆம் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.


Share it if you like it