ராமலிங்க முதலியார்

ராமலிங்க முதலியார்

Share it if you like it

ராமலிங்க முதலியார் செங்கல்பட்டு பக்கம் 17ம் நூற்றாண்டில் வசித்தவர், பெரும் வியாபாரி வெள்ளையனோடு வியாபாரம் செய்த காலத்தில் நன்றாக ஆங்கிலம் கற்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்

இந்தியாவில் அவரை போன்ற ஆட்கள் அவசியம் என்பதால் தங்கமும் வெள்ளியும் கொட்டி தனக்கு சமமான அந்தஸ்தில் திவான் போல கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்தது

பெரும் அரண்மனையும், குதிரை வண்டியும் வீடெல்லாம் தங்க பாளமும் வெள்ளி கட்டியுமாக பெரும் வாழ்வு வாழ்ந்தவர் அவர், அப்பொழுதே “அல்பேகா” எனும் கருப்பு கோட்டு அணிந்தவர் அவர் வீடெல்லாம் எப்பொழுதும் மூட்டை மூட்டையாக நாணயம் கொட்டபடும் அள்ளபடும் சத்தம் கேட்டு கொண்டே இருந்த வீடு அது அவர் வியாபாரம் நடத்தியவர் என்றாலும் வெள்ளையனிடம் கவுரவ பதவியிலும் இருந்தார்

அப்பொழுதுதான் பாணர்மேன் நெல்லை மேல் படை எடுத்து கட்டபொம்மனை பிடித்து விசாரித்து தூக்கிலேற்றினான், அப்பொழுது கயத்தாரில் கட்டபொம்மனினின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அவர்தான் பின்பு ஊமைதுரையினை பிடித்து கொல்லுமுன் விசாரித்த இடமான அந்த பாளை மியூசியம் இருக்கும் மாளிகையில் சாட்சியாய் நின்றவரும் அவர்தான்

வெள்ளையன் இங்கு மக்களை சுரண்டும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்தான் சாட்சி, அதுவும் நெல்லை பக்கம் அவன் செய்த அவ்வளவு அட்டகாசத்துக்கும் அவரே மவுன சாட்சி

மெக்காலே என்பவனுக்கு அந்த ராமலிங்க முதலியாரே வலகரமாய் இருந்தார், அப்பொழுதுதான் மெக்காலே அவரை திருவனந்தபுரம் அழைத்து சென்றான். ஒரு கட்டத்தில் அந்த ராமலிங்க முதலியார் நெல்லை பக்கமே தங்க வேண்டியதாயிற்று. உள்ளூர வலி இருந்தாலும் வெள்ளையனை எதிர்க்கும் நிலையில் அவர் இல்லை, அன்று யாரும் இல்லை அந்த அளவு அவர்கள் காலூன்றியிருந்தார்கள், எனினும் இக்கொடுமை எல்லாம் தன் மகன் சுலோச்சனர் என்பவரிடம் சொல்லி வந்தார்

சுலோச்சன முதலியாரும் தந்தை வழி சொத்துடன் கவுரவ வேலையாக அரசில் இருந்தவர், அவரையும் நெல்லை பக்கம் தாசில்தார் போன்ற பணியான சிராஸ்தார் வேலைக்கு வைத்தான் வெள்ளையன். அந்த தாமிரபரணி நெல்லைக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையில் ஓடும் நதி, அது வற்றா நதி. அதை கடக்க அன்று பரிசலும் படகுமாக பெரும் சண்டை நடந்தது

பல வகையான மோதல்களும் பிரச்சினைகளும் கட்ட பஞ்சாயத்தும் இருந்தன, ஒரு கட்டத்தில் கொலைகளும் விழலாயிற்று. நெல்லையப்பர் கோவில் முதல் வணிக சந்தை எல்லாம் அப்பக்கம் இருக்க, இப்பக்கம் மக்கள் திணறினர், பணம் இருந்தால் பரிசலில் செல்லலாம் இல்லாவிட்டால் நீந்தலாம் உயிரோடு இருந்தால் கடக்கலாம். ஆம் அப்படித்தான் நிலை இருந்தது, மன்னர்கள் காலத்தில் இருந்த ஒழுங்கு வெள்ளையன் காலத்தில் இல்லை.

ஆங்கிலேய அரசு பாலம் கட்டுவதே தீர்வு என சொல்லிற்று, 1836ல் நெல்ல கலெக்டர் ஈடன் அதை முடிவு செய்தார். அரசு கட்டுங்கள் என சொன்னதே தவிர சல்லிகாசு கொடுக்கவில்லை. 1840 ஆண்டு பிரச்சினை பெரிதாகி ஆற்றங்கரையில் கலவரமும் கொலைகளும் நடக்க அன்றைய கலெக்டர் தாம்ஸன் பாலம் கட்ட தீர்மானித்தான், பாலம் வரைபடம் தயாரானது

ஹேர்ஸ்லி என்பவர் அதை வடிவமைத்தார். பாலம் லண்டனின் தேம்ஸ் நதியில் இருக்கும் வாட்டர்லூ பாலம் போலவே வடிவமைக்கபட்டது, 800 மீட்டர் நீளம், 21 அடி அகலம், 60 அடி விட்டம் உள்ளிட்ட‌ 11 வளைவுகளுடன் அது வரைபடமாக மிளிர்ந்தது. அவனும் அரசு காசில் கட்டவில்லை, அரசும் காசு கொடுக்கவில்லை. இது மக்களுக்கான திட்டம் என்பதால் மக்களிடம் காசு வசூலித்து கட்ட சொல்லி சுலோச்சன முதலியாருக்கு உத்தரவிட்டான்

அந்த நெல்லை வறுமையில் இருந்தது, அவர்கள் உழைப்பெல்லாம் வரி என ஆங்கிலேயனுக்கு சென்றுகொண்டிருக்க மிஞ்சியது வறுமை மட்டுமே. அவர்களை ஆளும் ஆங்கில அரசுதான் நிச்சயம் பாலம் கட்ட வேண்டும் ஆனால் செய்யவில்லை. அடியும் கொடுத்து வண்டியிழுக்க வைக்கும் மாடுகள் போல நடத்தபட்டனர். இந்நிலையில் பாலம் கட்ட 50 ஆயிரம் ரூபாய் என்றால் எப்படி கொடுப்பார்கள், அன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை அணாக்களில் இருந்தது என்றால் அது இன்றைய மதிப்பு பலநூறு கோடிகளுக்கு சமம்.

சுலோச்சன முதலியாருக்கு அம்மக்கள் மேல் அனுதாபம் பொங்கியது, தங்கள் குடும்ப சொத்தில் நெல்லை பகுதி மக்களின் பணமும் இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். கட்டபொம்மனும் ஊமைதுரையும் அவர் நினைவுக்கு வந்து சென்றனர். ஒரு கட்டத்தில் தானே பாலம் கட்ட முடிவெடுத்தார் அவரின் மனைவி வடிவம்மாளும் ஒப்புகொண்டார், தன் வீட்டு நகை பணம் சொத்து என அள்ளி கொடுத்து அந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்

இந்நாட்டில் பென்னிகுயிக் வந்து அணைகட்டினான் என கொண்டாடுவார்கள், ஆனால் இங்கே ஒரு தமிழன் தன் சொத்தில் பாலம் அமைத்தான் என்பதை ஒருவரும் பேசமாட்டார்கள். நிச்சயம் முல்லைபெரியாறு போன்றே அக்காலத்தில் நெல்லை பாலமும் பெரும் சாதனை, அதன் பின்பே போக்குவரத்து எளிதாகி அந்த பகுதி வேகமாக வளர்ந்தது. நிச்சயம் அந்த சுலோச்சன முதலியார் என்பவரின் மனமும் செயலும் பாராட்டபட வேண்டும்

இன்றோடு அந்த பாலத்துக்கு 178 வயதாகின்றது, இன்னும் பல்லாண்டு நிற்கும் வகையில் அது வலுவோடு நிற்கின்றது. இப்பொழுது அந்த சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கின்றார்கள், பாலத்தின் நினைவுநாள் அன்று நெல்லைக்கு வந்துவிட்டு போவது அவர்கள் வழக்கம். அவர்களை யாருக்கும் தெரியாது அவர்களும் யாரிடமும் எதுவும் சொல்வதுமில்லை, அவர்களின் சொத்து ஒன்று பாலம் கட்டியதற்காக ஆங்கிலேயன் கொடுத்த செப்பு பாராட்டுபத்திரம் ஒன்றுதான்

ஆம் அது அவர்களிடம் இன்றும் உண்டு. அதே பாலம் அருகில் இப்பொழுது தமிழக அரசு இன்னொரு பாலம் கட்டுகின்றது, அதன் ஒப்பந்தக்காரர் அதை அனுமதித்தவர்கள் அதில் கொட்டும் பணம் என கணக்கிட்டால் தலை சுற்றுகின்றது. இவ்வளவு பணம் கொட்டபடும் பாலம் வெள்ளத்தில் நிற்குமா என்றால் தெரியாது, திராவிட தொழில்நுட்பம் அப்படி

ஆம் இன்று பாலம் கட்டுவதே கமிஷனுக்கானது எனும் நிலையில் தன் சொந்த பணத்தையெல்லாம் ஆற்றில் மக்களுக்காக போட்ட அந்த சுலோச்சன முதலியார் வணங்கதக்கவரே. வ.உ.சி, பாரதி போன்றோர் வரிசையில் அந்த முதலியாருக்கும் நிச்சயம் இடம் உண்டு,  சுலோச்சன முதலியாரின் உதவியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்தது

(யானைமேல் அவரை அமரவைத்து மக்கள் அழைத்து வந்து மகிழ்ந்தார்களாம்) அதன் பின் தமிழகத்தில் காங்கிரஸ் போல் அதுவும் காணாமல் போனது ஆனாலும் சில அடையாளம் மிஞ்சியது. 1970ல் திராவிட ஆட்சியில் வெள்ளையன் போட்ட சாலையும் பாலமும் அண்ணா சாலை என மாறும் பொழுது இந்த சுலோச்சன முதலியாரின் கல்வெட்டு இடித்து வீசபட்டது.

திராவிடம் காக்கும் தமிழர் பெருமை அப்படி. எப்படியோ சுலோச்சன முதலியார் பாலம் என்ற ஒரு சிறிய கல்வெட்டும் ஆவணங்களும் மிஞ்சிவிட்டன‌. இல்லாவிட்டால் அது அண்ணா பாலம் என்றாகியிருக்கும் இன்னொரு கோஷ்டி ராம்சாமி திரட்டிய நிதியில் அண்ணா கட்டியது என கிளம்பியிருக்கும். இப்போது கருணாநிதிதான் சாந்து குழைத்து சுமந்தார் என்றொரு புது கோஷ்டியும் கிளம்பியிருக்கும்

ஆம் நெல்லையில் ஒரு மேம்பாலத்தை அரசு நிதியில் கட்டிவிட்டு அதில் கறக்க வேண்டியதை கறந்துவிட்டு தென் தமிழகத்துக்கே பாலத்தை அறிமுகபடுத்தியது கருணாநிதி என ஒருகும்பல் ஊளையிட, ஒரு சிறிய மேம்பாலத்தை கட்டிவிட்டு அதற்கு திமுகவின் செல்லபாண்டியன் பெயரை சூட்டி அரசியல் செய்யும் அவர்களைவிட‌. 178 ஆண்டுக்கு முன்பே தன் சொத்துக்களை எல்லாம் இழந்து தன் பெயரையும் வைக்காமல் சிலையும் வைக்காமல் பாலம் கட்டி மக்களை பயனுற செய்த அந்த பெருமகன் எக்காலமும் வாழ்த்துகுரியவர்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடாமல் மொத்தமும் கொட்டிய மாமனிதர் அவர். வெள்ளையன் இங்கு அதை கிழித்தான், கல்வி கொடுத்தான் , ரயில் அமைத்தான் என்பதெல்லாம் சுயநலம். தனக்கு லாபமில்லா எதையும் பற்றி அவன் சிந்திக்கவே இல்லை, கல்வி கூட தனக்கு ஒரு அடிமைகளை உருவாக்கும் வகையில்தான் செய்தான். இது வரலாறு எங்கும் காணகிடந்தாலும் நெல்லையில் மிக அழகாக தெரிகின்றது

நெல்லைக்கு செல்லும் வாய்பிருந்தால் ஆற்றங்கரை ஓரமாக தள்ளி நின்று அந்த கவனியுங்கள், அதன் அழகும் பிரமாண்டமும் தெரியும் அதை விட பிரமாண்டமாக சுலோசன முதலியார் தெரிவார்

  • Stanley Rajan

Share it if you like it