ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நிறைவு!

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நிறைவு!

Share it if you like it

         

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) சார்பில், இரண்டாம் ஆண்டு (21 நாள்) பண்புப் பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள், இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த முகாமின் நிறைவு நிகழ்ச்சி, ஆதித்யா மேனேஜ்மெண்ட் சயின்ஸ் & ரீசர்ச், கோனேரிக் குப்பத்தில், மே மாதம் 13 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, நடைபெற்றது. முகாமில் பயிற்சி பெற்றதை,  ஸ்வயம்சேவகர்கள் செய்து காட்டினார்கள். நிகழ்ச்சிக்கு நித்யா பேக்கேஜிங் கம்பெனியின்  இணை நிர்வாக இயக்குனர் திரு P தாமோதரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

ஒர்த் தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் முதல்வர் திரு V குமார் அவர்களும், ஸ்ரீ கணேஷ் குமார் கன்ஸ்ட்ரக்ஷின் நிறுவனர் திரு C கணேஷ் குமார்  அவர்களும் முன்னிலை வகித்தனர். வட தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் திரு பூ.மு. ரவிக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

முகாம் தலைவர் திரு P மணிவாசகம் அவர்களும், வரவேற்புக் குழுத் தலைவர் திரு R அரவிந்தன் அவர்களும், புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ். கோட்டத் தலைவர் ஆடிட்டர் திரு V செல்வராஜ் அவர்களும், ஸ்வயம்சேவகர்களும் மற்றும் பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வருடந்தோறும் அகில பாரதம் முழுவதும்  நடைபெறும் முகாமில், இந்த வருடம் 109 முகாம்,  இதுவரை நடைபெற்றது.  மே 1 முதல் 4 ஆம் தேதி வரை அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன் பகவத் அவர்கள் கலந்து கொண்டார். அகில பாரத பொறுப்பாளர்களும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்களும் முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

புதுச்சேரியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓரு வேளை உணவு சமைத்து வந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் முகாமில் பறிமாறினர். முகாமில் தினமும் புதுவையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்கள், வில்லியனூரில் பதசஞ்சலன் (அணிவகுப்பு ஊர்வலம்) நடத்தினர்.


Share it if you like it