எனக்காக சட்டத்தையே மாற்றியவர் அண்ணன் – சீ ‘மான்’ பெருமிதம்!

எனக்காக சட்டத்தையே மாற்றியவர் அண்ணன் – சீ ‘மான்’ பெருமிதம்!

Share it if you like it

நான் இலங்கையில் இருந்த சமயத்தில், எனக்காக சட்டத்தையே மாற்றியவர் அண்ணன் பிரபாகரன் என்று சீமான் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், மற்றும் அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர். சினிமாவில், எதிர்பார்த்த அளவிற்கான உயரத்தை இவரால் எட்ட முடியவில்லை. இதையடுத்து, இவர் துவங்கிய கட்சி தான் நாம் தமிழர் கட்சி. இவர், அளந்து விடும் கட்டுக்கதைகளுக்கும், பொய்களுக்கும் ஒரே அளவே இல்லை என்று கூறலாம்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்து விடும் என்பது பழிமொழி. அதற்கு, உருவம் கொடுத்தால் அது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானாக தான் இருக்க முடியும் என்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, பல்வேறு கதைகளை கூறுவார் என்பதே நிதர்சனம். அந்தவகையில், பலம் படைத்த காட்டெருமை ஒன்றை கொசுக் கூட்டம் வீழ்த்தியதாக சமீபத்தில் தம்பிகள் முன்பு கூறியிருந்தார். இது எங்கேயோ பார்த்த படம் போல உள்ளதே என நெட்டிசன்கள் சீமானை வறுத்தெடுத்து இருந்தனர்.

இதனிடையே, இலங்கை எம்.பி. ஒருவர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சீமானின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தார். அதன் லிங்க் இதோ.

இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறைக்கு சீமான் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். மானை கொல்ல கூடாது என்று அண்ணன் பிரபாகரன் தடை விதித்து இருக்கிறார். நான் சென்று இருந்த போது மானை சுட வேண்டும் என்று கூறியிருந்தார். அருகில் இருந்த தம்பி என்னிடம், மானை சுட கூடாது என்று தலைவரே சட்டம் போடுகிறார். அதனை சீமானுக்கா மீற சொல்கிறார். இது குறித்து தலைவரிடம் நான் பேசுவேன் என்று அந்த தம்பி தம்மிடம் கூறியதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இக்காணொளி தான் தற்போது வைரலாகி வருகிறது.

விடுதலை புலிகளின் தலைவரை, சீமான் சந்தித்த பிறகு பெரும்பாலான பத்திரிகையாளர்களிடம் கூறி வருவது என்னவென்றால், உடும்பு கறி, மான் கறி, ஆமை கறியை சாப்பிட்டேன் என்று தெரிவித்து இருக்கிறார். இவர், இலங்கை சென்றது திண்பதற்கு தானா அல்லது பிரபாகரன் ஒரு நல்ல சமையல்காரர் என்பதை மக்களிடம் எடுத்து கூறுவதற்கா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Share it if you like it