கர்நாடக மாநிலத்தில் முதல்வரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை ஏற்க முடியாது – சீமான்

கர்நாடக மாநிலத்தில் முதல்வரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை ஏற்க முடியாது – சீமான்

Share it if you like it

தமிழகம் கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக சிக்கல் இருந்து வந்தது கடந்த காலங்களில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி இருந்தபோது அதன் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் முயற்சியின் பெயரை நடுவர் மன்ற தீர்ப்புகள் அமல்படுத்தப்பட்டது நடுவர் மன்ற தீர்ப்பு அரசு இதழில் வெளியிடப்பட்டது கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு மத்தியில் ஆடும் பாஜக அரசின் முழு ஒத்துழைப்போடு தமிழக அரசின் முயற்சி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை கட்டமைத்தது இதன் காரணமாக பல ஆண்டுகள் காவிரி நதிநீர் பங்கீடு ஒரு சிக்கல் என்றதை மறந்தே போனது வழக்கமாக கடந்த ஆண்டுகளில் காவிரி நதிநீர் தமிழகத்திற்கு சீராக கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு மீண்டும் இரு மாநிலங்கள் இடையே காவிரி நதிநீர் பங்கீடு சிக்கலாகி இரு மாநிலங்களிலும் பரபரப்பும் பதற்றமும் நீடிக்கிறது.

மேகதாது அனைத்து எதிர்ப்பு காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டிற்கும் அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரங்களில் பெங்களூரில் ஒரு நாள் அடைப்பு நடந்தது அதன் பிறகு கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு தமிழகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது இந்த நிகழ்வுகளின் போது கர்நாடக மாநிலம் முழுவதிலும் அங்காங்கே போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது அதில் தமிழகத்தின் முதல்வர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களின் உருவப்படங்கள் அவமதிக்கப்பட்டது பல இடங்களில் தீ வைக்கும் கொளுத்தப்பட்டது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது தமிழகத்தில் இருந்து லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை கர்நாடக மாநிலத்தின் அடைப்பு காரணமாக இயக்க வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழக முதல்வரின் உருவப் படங்கள் அவமதிக்கப்பட்டது ஏற்புடையதல்ல இது கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் செபாஸ்டியன் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் உருவப்படங்கள் அவமதிக்கப்பட்டது எரிக்கப்பட்டது ஏற்புடையதல்ல ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருப்பவரை அண்டை மாநிலத்தில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் இதுபோல அவமதிப்பதையும் அதை அந்த மாநில காவல்துறையும் ஆளும் அரசும் வேடிக்கை பார்ப்பதும் ஏற்புடையதல்ல என்ற சீமானின் கருத்து முழுவதும் ஏற்புடையது அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் முதல்வர் என்பவர் தமிழக அரசின் அடையாளம் தமிழக மக்களின் பிரதிநிதியாக உலகம் முழுவதும் போய் சேர்ப்பவர் என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதாகவே கருதப்படும் அந்த வகையில் சீமானின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தமிழக முதல்வரின் திருவுருவப்படத்தை அவமதித்ததை கண்டித்த அதை செய்தவர்களுக்கு தனது கண்டடத்தை எதிர்ப்பை தெரிவித்த சீமான் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு பற்றியும் கர்நாடகா நிலைப்பாடு பற்றியும் உரிய விளக்கங்களையும் எழுப்பாமல் மௌனம் காப்பது அவரை உண்மை முகத்தை காட்டுகிறது. அப்படி எனில் இவர்களின் பிரச்சனை திமுக தலைவரின் அவமதிப்பு மட்டுமே தவிர தமிழக மக்களின் காவிரி நதிநீர் தேவை பற்றியோ கர்நாடக மாநிலத்தில் போதிய நீர் இருப்பு இல்லை என்று அவர்கள் பதில் அளிக்கும் நியாயம் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இல்லை மாறாக இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதை இவர்களின் எண்ணம் என்பது வெளிப்படுகிறது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்காக வந்தபோது படுகொலை செய்யப்பட்டவர் அவரின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு பாரதத்தில் அந்த அமைப்பிற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது விசாரணையின் பெயரில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விசாரணை முடிந்து தண்டனையின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அவர்களின் பல பேருந்து மரண தண்டனை பல்வேறு மேல் முறையீடுகள் மறுசீராக மனுக்கள் அடிப்படையில் மரண தண்டனை விளக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த குற்றவாளிகளின் தண்டனை குறிப்பு விவகாரத்திலும் அவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதற்கும் அந்த ஆயுள் தண்டனையும் போதுமானது இனி விடுவிக்க வேண்டும் என்ற தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் கருத்தியல்கள் பரப்புவதிலும் நாம் தமிழர் கட்சி முனைப்போடு செயல்பட்டது சமீபத்தில் சிறையில் இருந்து வெளியான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விருந்தினர்களைப் போல வரவேற்று அவர்களின் விடுதலையை வெற்றி திருவிழாவை போல் கொண்டாடி தீர்த்ததில் சீமானும் அவரது கட்சியின் பங்கும் அலாதியானது.

பொது மேடைகளிலேயே நாங்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றோம் எங்களுக்கு இந்த காரணங்கள் இருந்தது அதனால் தான் கொன்றோம் என்று வெளிப்படையாக பேசியவர் அவரின் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்ததை எதிர்த்தவர் அவர்களின் விடுதலைக்கு முழு முயற்சிகளை முன்னெடுத்தவர் அதற்கு ஆதரவான கருத்துகளை திரும்பிய பக்கம் எல்லாம் வளர்த்தெடுத்ததில் பங்கு வகித்தவர் ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ராஜீவ் காந்தி என்பவர் பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் ஒரு தேசியக் கட்சியின் தலைவர் இந்திய விமானப் படையின் விமானியாக இருந்தவர். பாரத தேசத்தின் சக குடிமகன் அந்த வகையில் அவரின் படுகொலையும் அவரோடு சேர்த்து படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் பெண்கள் காவல்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பட்டியல் நீழ்வதில் இருக்கும் அனைவரும் எந்த கட்சி அரசியலுக்கும் அப்பாற்பட்ட அப்பாவிகளை.

தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள் விருப்பு வெறுப்புகளுக்காக பயங்கரவாதத்தை கட்டவிழித்ததை முன்வைத்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மீது இதுவரையில் சீமான் கண்டனங்கள் தெரிவித்ததில்லை ஆனால் அவர்களை எல்லாம் நாயகர்களைப் போல கொண்டாடுகிறார்கள் அண்டை நாட்டில் இருந்து ஊடுருவி வந்து இந்த தேசத்தின் தலைவரை கொன்று குவித்ததை பற்றி இதுவரையில் ஒரு கண்டனம் இல்லை ஆனால் அவரின் கொலையை வெற்றி சாதனை போல மேடைக்கு மேடை கொண்டாடி வருகிறார்கள். இந்த தேசத்தின் பிரதமருக்கும் அவரின் உயிருக்கும் கூட இல்லாத பரிதவிப்பும் கண்டனமும் இவர்களது மாநில முதல்வர் என்னும் போது திருவுருவப்படத்தை அவமதித்தாலும் அண்டை மாநிலத்திற்கு இவர்கள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் எனில் இவர்கள் யார் இவர்களை நோக்கம் என்ன.

ஒரு தேசத்தின் பிரதமரை கொன்று குவித்ததற்கு ஒன்று கூடி திருவிழா கொண்டாடுபவர்கள் அவர்களின் கொலையாளிகளுக்கு விடுதலையை வேண்டுபவர்கள் மத்திய அரசு மட்டும் கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் அவர்களுக்கு பல கோடிகளில் இந்திய அரசின் சார்பில் இருந்து இழப்பீடும் இன்னும் ஏராளமான வசதிகள் வாய்ப்புகளை கூட கேட்டு இருப்பார்கள் ஆனால் தமிழக பாஜகவும் மத்தியில் ஆளும் அரசும் உள்துறை அமைச்சகம் உளவுத்துறை உள்ளிட்டவை கடைப்பிடித்த கண்டிப்பு காரணமாக விடுதலையோடு நிறுத்திக் கொண்டார்கள் இந்த உண்மை இங்குள்ள ஒவ்வொரு தேசிய பாதிக்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரியும்.

ஒரு தேசத்தின் தலைவர் கொள்ளப்படும் போது அவரோடு சேர்த்து பல அப்பாவிகள் கொல்லப்படும்போது வராத மனிதாபிமானம் அந்த இழப்புக்கள் அதன் பின் இருக்கும் பல குடும்பங்களின் இழப்புகள் பற்றி யோசிக்கும் போது வராத நடுநிலையும் ஒரு மாநில முதல்வரின் திருவுருவப்படத்தை அவமதித்தது இவர்களுக்கு வருமானால் இதற்கு பெயர் உண்மையான நடுநிலையோ மனிதாபிமானமாகவோ தன்மானம் சுய கௌரவமாகவோ இருக்க முடியாது இது முழுக்க முழுக்க சுய சார்பு தன்னுடைய சுய விருப்பு வெறுப்பு காரணமான அரசியல் ஆதாயம் கருதிய அப்பட்டமான ஒரு சார்பு நிலையாக மட்டுமே கருதப்படும் இது போன்ற சுய விருப்பு வெறுப்புக்காக அரசியலில் கருத்தியலை உருவாக்கி தங்களின் சுய ஆதாயம் கருதி பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் என்றைக்கும் தேசத்திற்கும் மக்களுக்கும் நல்லது நினைக்கவும் செய்யவும் முடியாது மாறாக இவர்களால் பேரழிவுகளும் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் மட்டுமே அரங்கேற்ற முடியும்.

இவர்களின் இந்த நிலைப்பாடு உண்மையாக உளப்பூர்வமானதாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு இந்த பாரத தேசத்தின் மீது பற்றுதல் இல்லை இந்த தேசத்தின் தேசத் தலைமை இறையாண்மை பற்றி எல்லாம் அக்கறை இல்லை இவர்கள் தனி தமிழ்நாடு என்ற உணர்வில் இருப்பவர்கள் அந்த வகையில் அவர்களின் மாநில முதல்வர் அவமதிக்கப்பட்டதிற்காக மட்டுமே குரல் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம் அப்படியானால் இவர்களும் இவர்கள் சார்ந்த கட்சிகளும் அமைப்புகளும் தேச விரோத கட்சியாக அமைப்பாக கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் இவர்களின் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

மாறாக திமுக தலைவர் தமிழக முதல்வர் கர்நாடக மாநிலத்தில் அவமதிக்கப்பட்டது மேலோட்டமாக அரசியல் ஆதாயத்திற்காக இவர்கள் கண்டனம் எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட முயல்வார்களே ஆனால் இவர்களுக்கு உண்மையில் தமிழக மக்களின் நலன் அவர்களின் உரிமைகள் பற்றி எந்த அக்கறையும் கிடையாது தமிழக அரசு அந்த அரசின் நிலைப்பாடு பற்றி எல்லாம் எந்தவிதமான அபிமானமும் கிடையாது ஆளும் ஆட்சியாளர்கள் அல்லது தங்களது சுய ஆதாயம் கருதி சார்புள்ள ஆட்சியாளர்களுக்கு துதிப்பாடி அதன் மூலம் தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதும் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வதும் இவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது. இந்த இரண்டில் இவர்களின் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் தமிழக மக்களின் நலனுக்கும் கர்நாடக மக்களின் நலனுக்கும் இரு மாநில உறவுகளுக்கும் இவர்கள் எதிரானவர்களை. இரு மாநில உறவுகளையும் சீர்குலைக்க அதன் மூலம் இந்த தேசத்தின் இறையாண்மையை ஒற்றுமையை குறைக்க வேண்டும் என்ற சதியோடு செயல்படுபவர்களாகவே இவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் அவ்வகையில் இவர்கள் முன்னெடுக்கும் கருத்தியல் அரசியல் எல்லாமே பாரத தேசத்திற்கும் தேச பாதுகாப்பிற்கும் தேசிய இறையாண்மைக்கும் எதிரானது. இதை உரிய காலத்தில் மத்திய அரசு கவனத்தில் கொண்டு இது போன்ற கட்சிகள் அமைப்புகள் மீது கண்காணிப்புகளையும் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் தமிழகத்தின் திரும்பிய பக்கம் எல்லாம் மொழி இனவாதம் பிரிவினை வாதம் மதவாதம் மத பயங்கரவாதம் ஆதரவு கருத்தியல்களை பரப்பும் விஷமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும் வளரும் தலைமுறைகள் மத்தியில் தேச பாதுகாப்பு தேசிய இறையாண்மை பற்றிய நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில ஆளுநரும் மத்திய உள்துறை அமைச்சகமும் உரிய காலத்தில் எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தில் இரு தலக்கும் ஒவ்வொரு தேசியவாதியின் எதிர்பார்ப்பு.


Share it if you like it