பி.டி.ஆர். மாற்றம் அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி: மூத்த பத்திரிகையாளர் மணி பகிரங்க ஒப்புதல்!

பி.டி.ஆர். மாற்றம் அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி: மூத்த பத்திரிகையாளர் மணி பகிரங்க ஒப்புதல்!

Share it if you like it

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் இலாகாவை தி.மு.க. அரசு மாற்றியதே அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றிதான் என்று மூத்த பத்திரிகையாளர் மணி பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டபோது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இவ்வழக்கை விசாரிப்பது தமிழக போலீஸார்தானே. இதுவரை போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. தற்போது புதிதாக இன்னொரு விஷயத்தை அண்ணாமலை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

மத்திய அரசின் பிரதிநிதி, இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர், பிரதமர் மோடியின் காரில் பயணிக்கக் கூடியவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய மாணவர் அண்ணாமலை. அப்படிப்பட்டவரை தி.மு.க. எப்படி சமாளிக்கப்போகிறது. பி.டி.ஆர். இலாக மாற்றம் என்பது அண்ணாமலைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதுமட்டுமா, உதயநிதியும், சபரீசனும் கடந்த 2 ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் சம்பாரித்து விட்டதாக பட்டி தொட்டி முதல் தமிழகம் முழுவதும் இன்றுவரை பேசப்படுகிறதா இல்லையா…” என்று பரபரப்பாக பேட்டியளித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மூத்த பத்திரிகையாளர் மணி, இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it