உங்கொப்பன் மவனே: அமைச்சர் துறையை சீண்டிய கூல் சுரேஷ்!

உங்கொப்பன் மவனே: அமைச்சர் துறையை சீண்டிய கூல் சுரேஷ்!

Share it if you like it

நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையை மறைமுகமாக கிண்டல் செய்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழர்களின் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜீத் நடித்த துணிவு திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகியது. இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில், இரு நடிகர்களின் ரசிகர்கள் தங்களது கதாநாயர்களின் திரைப்படங்களை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் யூ டியூப் சேனலை சந்தித்து இருக்கிறார். அந்தவகையில், அவர் பேசும் போது, பொங்கலுக்கு ’வாரிசா அல்லது துணிவா அதிக வசூலை குவிக்கும் என கேட்கிறார். இந்த இரண்டு படங்களை விட உங்கொப்பன் மவனே டாஸ்மாக் தான் அதிக வசூலை குவிக்கும் என கூறியிருக்கிறார்.

இவரது, கருத்து சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க.வை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Share it if you like it