கவர்னர் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியது உண்மை: டி.ஜி.பி.க்கு பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு கடிதம்!

கவர்னர் கான்வாய் மீது தாக்குதல் நடத்தியது உண்மை: டி.ஜி.பி.க்கு பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு கடிதம்!

Share it if you like it

கவர்னரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவும், முதல்வர் ஸ்டாலினும் கூறியிருக்கும் நிலையில், கவர்னர் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்று அவரது பாதுகாப்பு அதிகாரி டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் முட்டலும் மோதலுமாகவே இருக்கிறது. குறிப்பாக, நீட் மசோதா விவரத்தால் மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்த சூழலில், தமிழப் புத்தாண்டையொட்டி கிண்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தன. அதேசமயம், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. ஆகவே, கட்சித் தலைவராக ஸ்டாலின் புறக்கணித்திருந்தாலும், முதல்வர் அவர் கண்டிப்பாக கலந்து கொண்டிருக்க வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுத திட்டமிட்டிருந்தார் கவர்னர் ரவி.

இந்த நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இதை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆனால், திராவிட இயக்கங்கள் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனவே, மயிலாடுதுறை அருகே கவர்னரின் கான்வாய் சென்றபோது, திராவிடக் கட்சியினரும், தேச விரோத கும்பல்களும் சேர்ந்து கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டியதோடு, கான்வாய் மீது கொடிக் கம்பங்களையும், பதாகைகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும், இந்த வீடியோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு தமிழக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. ஆனால், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவோ, கவர்னரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலினும் இன்று சட்டமன்றத்தில் பேசும்போது, கவர்னர் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று வக்காலத்து வாங்கினார். ஆனால், வீடியோ ஆதாரம் பக்காவாக காட்டிக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில்தான், கவர்னரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்றும், அதிர்ஷ்டவசிமாக உள்ளே இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான விஷ்வேஸ் பி. சாஸ்திரி. அதில், கவர்னரின் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற விடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், திராவிட இயக்கங்கள் தாங்கள் கவர்னரின் கான்வாயை தாக்கவில்லை. பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தைத்தான் தாக்கினோம் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறார்கள்.

இதனிடையே, தனது தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தது, மயிலாடுதுறையில் தன் மீது கொடிக்கம்பங்கள், பதாகைகள், கற்கள் வீசப்பட்டது தொடர்பாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கி சீர்குலைந்து கிடப்பது குறித்தும் விவரிக்க, இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. எனினும், இதற்கு முன்பாகவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது தொடர்பாகவும், கவர்னரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. ஆகவே, தமிழக அரசுககு பெரும் சிக்கல் காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.


Share it if you like it