தில்லை நடராஜரை இழிவுபடுத்திய தி.மு.க. ஆதரவாளர் யூ2 புரூட்டஸ்!

தில்லை நடராஜரை இழிவுபடுத்திய தி.மு.க. ஆதரவாளர் யூ2 புரூட்டஸ்!

Share it if you like it

தில்லை நடராஜரை இழிவுபடுத்தும் வகையில் தி.மு.க. ஆதரவாளரான யூடியூப்பர் யூ2புரூட்டஸ் வீடியோ வெளியிட்டிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிடக் கழகத்தினரும், தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஹிந்துக்களையும், ஹிந்து தெய்வங்களையும், ஹிந்துமத சடங்குகளையும் இழிவுபடுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், திராவிடர் கழகத்தினர் ராமர் சிலையை செருப்பால் அடித்து அவமதித்ததுடன், விநாயகர் சிலையை உடைத்தனர். அதேபோல, தி.மு.க. தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், இஸ்லாமிய திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, ஹிந்து திருமணங்களின்போது சொல்லப்படும் மந்திரம் மிகவும் ஆபாசமானது, கொச்சையானது என்று சொல்லி ஹிந்து திருமண சடங்குகளை இழிவுபடுத்தி பேசினார்.

இதேபோல, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரது கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பொதுவெளியில் மேடை ஒன்றில் பேசும்போது, குவி மாடமாக இருந்தால் அது இஸ்லாமிய மசூதி, கூம்புபோல இருந்தால் அது கிறிஸ்தவ தேவாலயம், அசிங்க அசிங்கமான சிறு சிறு பொம்மைகள் இருந்தால் அது ஹிந்து கோயில் என்று ஹிந்து கோயில்கலை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்தார். இவர் ஹிந்துவா, கிறிஸ்தவரா, இஸ்லாமியரா என்பது அவருக்கும் தெரியாது, வேறு யாருக்கும் தெரியாது. ஏனெனில், இவர் ஒரு நிகழ்ச்சிகளில் பேசும்போது தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும், இன்னொரு நிகழ்ச்சியில்போது இஸ்லாம் மதத்தை தழுவிட்டதாகவும் கூறிவருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க.வின் ஆதரவுபெற்ற கருப்பர்கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவன் கடந்தாண்டு யூடியூப்பில் வெளியிட்ட ஒரு வீடியோவில் கந்தசஷ்டி கவசத்தையும், முருகனின் வேலையும் இழிவுபடுத்தி பேசியிருந்தான். இதையடுத்து, இவன் மீது ஹிந்து அமைப்புகள் கொடுத்த புகாரின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். இதன் பிறகு, யூடியூப்பர்கள் அடக்கி வாசிக்கத் தொடங்கினர். ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குண்டர்களின் அட்டகாசம் தொடங்கி விட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள், மத மாற்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.

அந்த வகையில், ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையிலான சம்பவங்களும் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன. இந்த சூழலில்தான், தில்லை நடராஜரை இழிவுபடுத்தும் வகையில், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறான் தி.மு.க.வின் ஆதரவாளரான யூடியூப்பர் யூ2புரூட்டஸ் (u2Brutus). அதாவது, ‘நடராஜர் கலை தூக்கி நிற்க இதுதான் காரணம்’ என்கிற தலைப்பில் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கும் அவன், மனசு புண்பட்டா கம்பெனி பொறுப்பாகாது என்றும் நக்கலாக பதிவிட்டிருக்கிறான். அந்த வீடியோவில் தில்லை நடராஜர் காலை தூக்கி நடனமாடுவதை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறான். இவன் இதற்கு முன்பும் ஹிந்து கடவுள்களை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காணொளிதான் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களும், ஹிந்து அமைப்பு பிரதிநிதிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். யூடூபுரூட்டஸை கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்களும், ஹிந்துக்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், இதே ஒரு இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியோ, கிறிஸ்தவ சமூகத்தை இழிவுபடுத்தியோ வீடியோ வெளியிட்டிருந்தால் இந்நேரம் என்னவாகி இருக்கும்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் ஹிந்து அமைப்பினர், யூடியூப்பர் யூடூபுரூட்டஸை உடனடியாகக் கைது செய்து சுரேந்திரனைப் போல குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் ஹிந்துக்களை திரட்டி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆகவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு யூடியூப்பர் யூ2புரூட்டஸை உடனடியாகக் கைது செய்து, ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் ஹிந்து அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும், இவனது யூடியூப் சேனலையும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Share it if you like it