மோடி அரசை பின்வாசல் வழியாக கவிழ்க்க மிகப்பெரிய சதி..!

மோடி அரசை பின்வாசல் வழியாக கவிழ்க்க மிகப்பெரிய சதி..!

Share it if you like it

மோடி அரசை பின்வாசல் வழியாக கவிழ்க்க களமிறங்கிய அமெரிக்க டெமகிராட்டிக் கட்சியும் அமெரிக்க கம்பெனிகளும் – பேஸ்புக், டிவிட்டரை மோடி அரசு தடை செய்ய நேரிடுமா?

”கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்க தேவையான, ஒரு சில மூல பொருட்களை அமெரிக்கா நமக்கு தராமல் நிறுத்தி வைத்திருந்தது. சொல்லப்பட்ட காரணம் ஏதுமில்லை. அமெரிக்கா ஏற்கனவே, அவர்களின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு தடுப்பூசிகளை கைவசம் வைத்திருக்கிறது. எனவே இது அவர்களுக்கான மருந்து என்ற காரணமும் இல்லை. இது கோவிஷீல்டு மற்றும் மற்றைய தடுப்பூசிகளுக்குத்தான். கோவேக்சின் முழுக்க முழுக்க இங்கேயே தயாரிக்க முடியும்.

அப்படியிருக்க மூலப்பொருட்களை தடை செய்யவேண்டிய அவசியம் என்ன?
அமெரிக்க அரசின் எந்த நிலையிலுள்ள அதிகாரிகளும், செக்கரட்டரிகளும், நம் ஊரில் இருக்கும் அமைச்சர்கள் போல இருப்பவர்களும் எந்த ஒரு டிவிட் கூட போடவில்லை, அறிக்கையும் விடவில்லை. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், போன்ற அமெரிக்க கம்பெனிகளின் சீஇஓக்களும் அமைதியாக அமெரிக்க அதிபர் பைடன் என்ன செய்யப்போகிறார் என பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

ஐந்து நாட்களுக்கு முன்பு அஜீத் டோவலுக்கும். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனுக்கும், இடையே முதல் முதலாக உரையாடல் நடக்கிறது.
அதை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிடுகிறது.

என்னவென்று?

அமெரிக்கா உதவி செய்யும், கூடவே யுஎஸ்எய்டு எனும் மத மாற்ற ( ஆட்சி கவிழ்ப்பு) நிறுவனத்தை உள்ளே அனுப்பும், அமெரிக்க கம்பெனிகளையும் அனுப்பும் என்று. வெள்ளை மாளிகை அமெரிக்க கம்பெனிகளின், நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளது. அதன் பின்பு ஆளுவோர்களின், சிக்னல் கிடைத்தவுடன். வரிசையாக அறிக்கைகளும், டிவீட்டுகளும், வரத்தொடங்கின.

கூகுள் 135 கோடி கொடுப்பதாகவும், மைக்ரோசாப்ட் எல்லா, உதவிகளையும் செய்வதாகவும். அங்கிருக்கும் அமெரிக்க அரசு அதிகாரிகளும், செக்கரட்டரிகளும், அறிக்கைகள், டிவீட்டுகள், என போட்டு தாக்க தொடங்கி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் போட்ட டுவிட்-டில் மோடி அரசு என்றோ, இந்திய அரசு என்றோ குறிப்பிடவில்லை. இந்திய மக்களுடன் அமெரிக்க அரசு துணை நிற்கும் என சொல்லியிருக்கிறது. அந்த பேச்சுவார்த்தைக்கு அடுத்து, நான்கு நாட்கள் முன்பு மோடியும், பைடனும், போனிலே பேசுகிறார்கள். அதன் பின்பு பேசிய அமெரிக்க அதிபர். அமெரிக்காவுக்கு தேவைப்படும் போது இந்தியா உதவியது போல இந்தியாவுக்கும் அமெரிக்கா உதவும் என சொல்கிறார்.

இது ஏன்?

அமெரிக்க டெமாக்ரட்டிக் கட்சி எப்போதுமே. இந்து விரோத நிலையையும், இந்திய விரோத நிலையும் எடுக்கும். பில் கிளிண்டன், ஒபாமா, என ஆட்கள் அனைவருமே அப்படித்தான். ரிப்பளிக்கன் கட்சியும் கொஞ்சம். இதே போல் தான் என்றாலும். அவர்கள் நம்மிடம் மதச்சார்பின்மை, மனித உரிமை, என்றெல்லாம் பாடம் எடுக்க மாட்டார்கள். நான் சாப்ட்வேர் வாங்குகிறேன், நீ பெட்ரோலியம், வாங்கு என முடித்து விட்டு போய்விடுவார்கள்.

டிரம்ப் உடன் மோடி நெருங்கிய, நண்பராக இருந்தார் எனவும்.
மோடி ஒரு பாஸீஸ்ட், அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். எனவும்
கங்கணம் கட்டி பதவி ஏற்றார் பைடன். அதை செயல்படுத்த தற்பொழுது தீவிர முயற்சி மேற்கொள்கிறார். அதற்கு பெயர் சாப்ட் ரெஜிம் சேஞ்ச். தமிழிலே சொல்ல வேண்டுமென்றால் புறவாசல் வழியாக வன்முறையின்றி ஆட்சியை கலைப்பது.

இதற்கு பேஸ்புக்கையும், டிவிட்டரையும், ஏவி விட்டிருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. டிரம்ப்-ஐ தோற்கடித்தது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தான் என நம்பும் டெமகிராட்டிக் கட்சியினர். அதையே இங்கேயும் (இந்தியாவில்) செய்யலாம் என முடிவு எடுத்து களம் இறங்கியுள்ளனர்.

தேசிய சிந்தனை கொண்டவர்களின், சமூகவலைதள பக்கங்களில். திடீரென பல நண்பர்கள் மாயமாகியுள்ளனர். தனது சித்தாந்தத்திற்கு எதிர்கருத்து உள்ள நபர்களையே தனது நட்பு வட்டத்தில் அதிகம் காட்டுவதாகவும். புதிதாக வரும் நட்புகளின் அழைப்புக்களோ மிக கொடூரமாகவும், ஆபாசமாகவும், இருப்பதாக பலரும் கூறி வருவது என்பது நிதர்சனமான உண்மை. தேசிய சிந்தனை கொண்ட ஏகப்பட்ட நபர்களின் பேஸ்புக், டுவிட்டர், பக்கங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்பட்டு வருவது என்பது மிகவும் கசப்பான உண்மை.

தேசத்திற்கு விரோதமாக, டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில். பொய்யாக எழுதி வரும். கம்யூனிஸ்டுகள், தி.மு.க, தி.க, வி.சி.க, பற்றியோ. தடுப்பூசி மற்றும் அது குறித்து தவறான முறையில் இன்று வரை. பிரச்சாரம் செய்து வரும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், கார்ட்டூனிஸ்ட்களின், சமூக வலைத்தள பக்கங்களுக்கு ஏன்? தடை விதிக்கவில்லை. என்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்று வரும் நாட்களில் அமேசான், நெட்பிளிக்ஸ், கூகுள், என அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் களமிறக்கப்படபோவதாக தற்பொழுது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசின் ஆணைக்கு உட்படாமல். டெல்லியில் நடைபெற்ற போலி விவசாயிகளின் போராட்டத்திற்கு. டுவிட்டர், பேஸ்புக், அதிக முக்கியத்துவம் கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

டுவிட்டர், பேஸ்புக், அமெரிக்கா, சீனா, போன்ற நாடுகளின் மறைமுக சூழ்ச்சிகளுக்கு எதிராக மோடி என்ன நடவடிக்கை எடுப்பார். சீன ஆப்களுக்கு ஆப்பு வைத்தது போல. டிவிட்டர், பேஸ்புக்கிற்கு, தடை செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாரா? என்பது பலரின் எண்ணமாக இருந்து வருகிறது.

வாஜ்பேயி அரசு அணுகுண்டு சோதனை செய்தபோது உலக நாடுகள் எல்லாம் தடை விதித்தன. பின்பு அது வேலைக்கு ஆகாது என பின்வாங்கின. அது போல் மோடி அரசும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Share it if you like it