மதம் மாறியோர் மீண்டும் ஹிந்து மதம் திரும்பினால் நிதியுதவி: தி கேரளா ஸ்டோரி படக்குழு அறிவிப்பு!

மதம் மாறியோர் மீண்டும் ஹிந்து மதம் திரும்பினால் நிதியுதவி: தி கேரளா ஸ்டோரி படக்குழு அறிவிப்பு!

Share it if you like it

மதம் மாறியவர்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பினால் நிதியுதவி வழங்கப்படும் என்று தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ஹிந்து பெண்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு ஹிந்து அமைப்புகள் ஆதரவு அளித்திருக்கின்றன. மேலும், ஹிந்துக்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேசமயம், இப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழகத்தில் இப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கு முன்பு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இத்திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. அதேபோல, மேற்குவங்கத்திலும் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், மதம் மாறியவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்கு திரும்பினால் 51 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த நிதி, மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வரும் கேரளாவைச் சேர்ந்த ஆர்ஷய வித்ய சமாஜத்துக்கு வழங்கப்படவிருக்கிறது. இது தொடர்பாக மும்பையில் நடந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா கூறுகையில், “படம் எடுப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மதம் மாறிய பெண்களை மீண்டும் ஹிந்து மதத்துக்கு கொண்டு வரும் பணியை தொடங்க உள்ளோம். இதற்காக ஆசிரமத்துக்கு 51 லட்சம் ரூபாய் வழங்குகிறோம். தொடர்ந்து நன்கொடை வழங்குவோம்” என்றார்.

இது ஒரு நல்ல தொடக்கம்…


Share it if you like it