தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்த்தேன். இப்படம், ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது என்று தமிழக கவர்னர் ரவி கூறி, உ.பிஸ்களை மீண்டும் கதற விட்டிருக்கிறார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. விபுல் ஷா தயாரித்திருக்கும் இப்படத்தில், அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த 32,000 ஹிந்து இளம்பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக கதையின் கரு அமைந்திருக்கிறது. இதனால், இப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
தன் காரணமாக, தமிழகத்தில் இத்திரைப்படம் வெளியான முதல்நாள் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும், மறுநாள் முதல் படம் திரையிடப்படவில்லை. அதேபோல, மேற்குவங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில், உலகம் முழுவதும் 37 நாடுகளில் வெளியாகி, இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் வரி விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, மதம் மாறியவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்கு திருமபி்னால் நிதியுதவி வழங்கப்படும் என்று இத்திரைப்படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தி கேரளா ஸ்டோரி படத்தை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று தனது மனைவியுடன் சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் பார்த்தார். இதைத் தொடர்ந்து, தமிழக ராஜ்பவன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு 9.14 மணியளவில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வரும் நிலையில், கவர்னருக்கு எதிராக உ.பி.ஸ்கள் மீண்டும் கதறலை தொடங்கி இருக்கிறார்கள்.