தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை நீக்கம்!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை நீக்கம்!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

விபுல்ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில், நடிகைகள் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்திருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த 32,000 ஹிந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து, மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுதான் கதையின் மையக் கரு. இப்படம் குறித்த வாத விவாதங்கள் நடந்து வந்த நிலையில், மேற்குவங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்ட நிலையில், சப்பை காரணத்தை சொல்லி திரையிடவில்லை.

இதையடுத்து, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் விபுல்ஷா, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது. விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளதால், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மேற்கு வங்க அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், படம் திரையிடும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.


Share it if you like it