2024 தேர்தல் உதயநிதியால ஊத்திக்கும்… தமிழகத்தின் பப்பவாக மாறுவார்… ஆர்.கே. ஆருடம்!

2024 தேர்தல் உதயநிதியால ஊத்திக்கும்… தமிழகத்தின் பப்பவாக மாறுவார்… ஆர்.கே. ஆருடம்!

Share it if you like it

மூத்த பத்தரிகையாளர் ஆர்.கே. ராதா கிருஷ்ணன் தி.மு.க. இளைஞரணி செயலாளர் குறித்து பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்க – திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், நேற்றைய தினம் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அந்தவகையில், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசியல்வாதிகள் என பலர் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளராக இருப்பவர் ஆர். ராதா கிருஷ்ணன். இவர், பிரபல இணையதள ஊடகமான ”தி டிபெட்” -க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

ஊடக நெறியாளர் தினேஷ் ; உதயநிதி ஸ்டாலினுக்கு நட்சத்திர அந்தஸ்து உள்ளது. அவரை, அமைச்சராக்கினால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகளை பெரும் அல்லவா?

இதற்கு, ஆர்.கே. கூறியதாவது ;

மொத்தமா ஊத்திக்கும் பாருங்க. பா.ஜ.க.வின் தேர்தல் வியூகத்தை பாருங்கள். என்னதான், நாம் அவர்களை குறை கூறினாலும், சரியான நேரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையை கொண்டு வந்தார்கள். அவரை ஏன்? தேர்ந்தெடுத்தார்கள் என்றால், உதயநிதி ஸ்டாலின் களத்திற்கு வருவார். அவர், அமைச்சர் ஆவார் என்பது பா.ஜ.க.விற்கு தெரியும். அப்போ, தமிழ்நாட்டை பொறுத்தவரை உதயநிதி Vs அண்ணாமலை என்று களம் மாறும்.

பா.ஜ.க. தலைவர் Vs உதயநிதி என்ற நிலை தமிழகத்தில் வந்து விட்டால். கரூர் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவரா? அல்லது கோடிஸ்வரன் குடும்பத்தில் பிறந்தவரா? என்ற ஒப்பீடு மக்கள் மத்தியில் வரும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டி, தனது காக்கி சட்டையை கழற்றி விட்டு அரசியலுக்கு வந்தவர். தனக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை உதறிய மனிதர் என்ற பேச்சு எழும். அந்தபக்கம், எங்கு சென்றாலும் விமானத்தில் செல்லும் நபராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எதிர்வரும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த ஒப்பீடுதான் நடக்கும். இங்குதான், தி.மு.க.விற்கு மிகப்பெரிய அடி விழ போகுது.

2024 -ல் அண்ணாமலை – மோடி என்று இருக்கும். அந்தபக்கம், மகன் – அப்பா என்று இருக்கும். இப்படிதான் பிரச்சாரம் செய்யப்படும். குடும்ப அரசியலை எப்படி? கையால வேண்டும் என்பது பா.ஜ.க.விற்கு நன்கு தெரியும். அப்படிதான், ராகுல் காந்தியை பப்பு என்று அழைத்தார்கள். அதுபோல, தமிழகத்தில் ஒரு பப்பு உருவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறியிருக்கிறார்.


Share it if you like it