கள்ளச்சாரயத்திற்கு எதிராக அ.தி.மு.க.வுடன் இணைந்து போராட தான் தயார் என வி.சி.க. தலைவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலைச் சிறுதைகள் கட்சி. இக்கட்சியின், தலைவர் திருமாவளவன். இவர், விடியல் ஆட்சியில் நடைபெறும் அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இப்படிப்பட்ட சூழல் நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 19- பேர் உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கோவத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மதுவிலக்குக்கு ஆதரவாக ஈ.பி.எஸ். போராடினால் நாங்களும் அவர்களுடன் இணைந்து போராட தயார். மது விற்பனையை அரசே கண்டும், காணாமல் இருப்பது சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளச்சாராய ஒழிப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். திருமாவின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பு ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி விட்டிருக்கிறது.