அய்யா ஆஸ்பத்திரி வேணும்… நீ எனக்கா ஓட்டு போட்டாய்? தொடரும் பொன்முடியின் அடாவடி!

அய்யா ஆஸ்பத்திரி வேணும்… நீ எனக்கா ஓட்டு போட்டாய்? தொடரும் பொன்முடியின் அடாவடி!

Share it if you like it

அய்யா ஆஸ்பத்திரி வேணும் என்று கேட்ட பொதுமக்களிடம், நீ என்ன எனக்கா ஓட்டுப் போட்டாய் என்று அமைச்சர் பொன்முடி திருப்பிக் கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் கிராமத்தில், கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்தனர். இக்குடும்பங்களுக்கு நிவாரண உதவிக்கான காசோலைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று வழங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு, “செஞ்சி மஸ்தான் 3 முறையும், பொன்முடி 5 முறையும் அமைச்சராக வந்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் மரக்காணத்திற்கு ஒரு நல்ல மருத்துவமனை இல்லை.

அவசர சிகிச்சை என்றால்கூட 40 முதல் 50 கிலோ மீட்டர் தாண்டித்தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. தற்போதுகூட, நல்ல மருத்துவமனை இங்கு இருந்திருந்தால் கள்ளச்சாராய உயிரிழப்பை தடுத்திருக்கலாம். ஆகவே, இங்கு நல்ல மருத்துவமனை கொண்டு வர அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். இதைக் கேட்டு ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி,  எனக்கா ஓட்டுப் போட்டீங்க என்று ஆவேசமாக கேட்டுவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் இவர்தானே தமிழகத்துக்கு அமைச்சர். அப்படியானால் தனக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு மட்டும்தான் செய்வாரோ, தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாரோ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இது குறித்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it