நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடந்தது என்ன..? வாரிசு அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுத்த பிரதமர்

நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடந்தது என்ன..? வாரிசு அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுத்த பிரதமர்

Share it if you like it

இன்று அரசியல் சாசன தினத்தை ஒட்டி நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி வாரிசு அரசியலை கடுமையாக சாடினார். அது குறித்து அவர் பேசுகையில்.

நமது நாட்டில் வாரிசு அரசியலை பல கட்சிகள் செய்துவருகிறது. அப்படி வாரிசு அரசியல் செய்ய விருப்பம் கொண்டவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. காரணம் நமது மக்களாட்சி தத்துவத்துக்கு மிகபயங்கர அச்சுறுத்தலாக வாரிசு அரசியல் இருக்கிறது. அப்படி செய்யக்கூடியவர்கள் தங்கள் குடும்பத்திற்காக சுயநல வட்டத்திற்குள் செயல்படுகின்றனர். நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கட்டுப்படுத்துவது கூடாது.

“உட்கட்சி ஜனநாயகத்தை, மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும்”

ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட அரசியல் குழுக்களின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே குடும்பத்திடம் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.


Share it if you like it