மீ டூ வைரமுத்து மீதான ஹிந்துக்களின் எதிர்ப்பால் நிகழ்ச்சிக்கு வரமறுத்த ராஜ்நாத்

0
2426
தமிழக ஹிந்துக்கள் எதிர்ப்பு - வைரமுத்து ப்ரோக்ராம் கேன்சல்

ஆண்டாள் நாச்சியார், ராமபிரானை அவமதித்ததோடு, பாடகர் சின்மயி உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் வைரமுத்து மீது உண்டு. திமுக தலைமைக்கு வேண்டிய ஆள் என்பதால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த லட்சணத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க SRM பல்கலை முன் வந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

அமைச்சருக்கு இருக்கும் பணிக்கு நடுவே வைரமுத்துவின் லீலைகள் குறித்தெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஏதோ கவிஞர், சரி இருக்கட்டுமே என்று ஒப்புக்கொண்டிருப்ப்பார். ஹிந்து விரோத போக்கு, பெண்கள் விஷயத்தில் மட்டமான குணம் என்று இருக்கும் ஒருவருக்கு வீணாய் போன பல்கலைக்கழகம் என்ன வேண்டுமானாலும் தரட்டும், ஆனால் அமைச்சர் பங்கேற்க கூடாது என்பதற்காகவும். ஹிந்துக்களின் உணர்வுகளுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கவும் தமிழக ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்நிகழ்ச்சியை ரத்துசெய்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
-சிவராம கிருஷ்ணன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here