2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இன்று கொல்கத்தாவில் ஐடிசி நட்சத்திரவிடுதியில் நடக்கிறது. 186 இந்திய வீரர்களும் 146 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். ஆப்கானிஸ்தானை சார்ந்த நூர் அஹமத் தான் இந்த ஏலத்தில் மிககுறைந்த வயதுடைய வீரராவார். இவரின் வயது 14 ஆண்டுகள் 350 நாட்கள் ஆகும் .
அணிகள் பல முன்னணி வீரர்களை தக்கவைத்துள்ளன. சென்னை அணி தோனி, ரெய்னா போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது. மும்பை அணியானது ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது அதிகட்டபட்சமாக 42 கோடியை கைவசம் வைத்துள்ளது. அதனால் ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கலாம் . குறைந்த பட்சமாக மும்பை அணியானது 13 கோடியை வைத்துள்ளது.
மும்பை அணியின் பிளெயிங் லெவேன் சிறப்பாக உள்ளதால் பேக்கப் வீரர்களை வாங்க அவர்கள் முயல்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 13 கோடியை வைத்துள்ளது. தீபக் சாகர் வேகப்பந்து வீச்சை கவனித்துகொள்வதால், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டரை வாங்குவதில் கவனம் செலுத்துவார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் எந்த அணியாலும் வாங்காமல் புறக்கணிக்கப்படலம், இளம் வீரர்கள் கொடிகளை அள்ளலாம். ஏனெனில் இது ஐபிஎல்! கிரிக்கெட் ஜுரம் இப்போதே ரசிர்கர்களுக்கு பிடித்துவிட்டது.!