#D40 படப்பிடிப்பில் தனுஷ்

#D40 படப்பிடிப்பில் தனுஷ்

Share it if you like it

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் படத்தின் பாடல் காட்சியொன்று மதுரை கீழ்குயில்குடியில் படமாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சஞ்ஜனா நடராஜன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மூத்த நடிகை வடிவுக்கரசி நடிக்கிறார்.

இந்த திரைப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் ‘ராஞ்சனா’ பட இயக்குனரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சன் பிக்சர்ஸ் பேனரில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டாஸ் திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. அடுத்தாண்டு தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக அமையப்போகிறது.


Share it if you like it