பா.ஜ.க. தலைவர் ட்வீட்!

பா.ஜ.க. தலைவர் ட்வீட்!

Share it if you like it

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ :

ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக, இசையை ஆளும் முடிசூடா மன்னரும், பாராளுமன்ற உறுப்பினருமான இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, தமிழக பா.ஜ.க. சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைஞானி அவர்கள், இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.

இன்று காலை, இசைஞானி அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானி அவர்கள், நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


Share it if you like it