நீதான் தைரியமான ஆளாச்சே… இப்ப பேசு பார்ப்போம்… நடிகை ஐஸ்வர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நீதான் தைரியமான ஆளாச்சே… இப்ப பேசு பார்ப்போம்… நடிகை ஐஸ்வர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில், நீதான் தைரியமான ஆளாச்சே… இப்ப பேசு பார்ப்போம் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். இதனால் இவர், அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி வருகிறார். அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு ஹிந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்பட்டதாக கூறியதோடு, ஹிந்தி தெரியாது போடா என்று டி சர்ட் அணிந்து புரட்சி செய்தார்.

இதன் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்கிற திரைப்படம் வெளியானபோது, சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கு, “எந்தக் கோயிலிலும் எந்தக் கடவுளும் என் கோயிலுக்கு இவங்க வரக்கூடாது, இதை பண்ணக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது, இதெல்லாம் தீட்டு’ என்று சட்டம் வகுக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியதுதான். கடவுளுக்கும் இந்த சட்டங்களுக்கும் சம்பந்தமேயில்லை. பெண்கள் கோயிலுக்குள் வர வேண்டாம் என்று எந்த கடவுள் சொன்னார் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று வீராவேசமாகப் பேசினார்.

அதேபோல, ஏற்கெனவே வெளியான “க/பெ. ரணசிங்கம்” படத்திலும் ‘தீட்டு என்ற பெயரில் பெண்கள் கோவிலுக்குள் வர வேண்டாம் என்று எந்த கடவுளுமே சொல்லியதில்லை. இது நாமே உருவாக்கியவை’ என்று டயலாக் பேசியிருந்தார். மேலும், நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்தக் கடவுளுமே என்னுடைய கோயிலுக்கு அவர்கள், இவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை” என்றெல்லாம் பஞ்ச் பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான கருத்துக்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆகவே, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. குறிப்பாக, திருவாரூரில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக இப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், படக்குழுவினருக்கும் மிரட்டல்கள் எழுந்தன. இதையடுத்து, ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை கருத்து எதுவும் சொல்லவில்லை. ஆகவே, நீதான் தைரியமான ஆளாச்சே, இப்ப கருத்துச் சொல்லு பார்ப்போம் என்று ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்து வருகிறார்கள். அதாவது, ஹிந்துக்களுக்கு எதிராக கருத்துச் சொல்லும் உன்னால், மற்ற மதங்களுக்கு எதிராக வாயைக்கூட திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டி வருகிறார்கள்.


Share it if you like it