பிரியாணியில் தலைமுடி… புகாரி மீது குவியும் புகார்!

பிரியாணியில் தலைமுடி… புகாரி மீது குவியும் புகார்!

Share it if you like it

தமிழகத்தில், பிரியாணிக்கு புகழ் பெற்ற கடைகளில் ஒன்றாக திகழ்வது ஹோட்டல் புகாரி. சமீப நாட்களாக இந்த கடையின் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் சென்னை மிகப்பெரிய நகரம். உலகிலேயே 2-வது பெரியதான மெரீனா பீச் இங்குதான் இருக்கிறது. தவிர, துறைமுகம் முதல் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதும் தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான். அதேபோல, சாஃப்ட்வேர் கம்பெனிகள் முதல் சாதாரண லேத் பட்டறை வரை வேலைக்கு பஞ்சமே இல்லாமல் இருப்பதும் சென்னை என்று சொல்லப்படுகிறது. இதுதவிர, சுவையான உணவினை தேடி பல யூ டியூப்பர்ஸ் சுற்றி வரும் இடங்களில் முதன்மையான இடமாக இருப்பதும் சென்னைதான். இப்படியாக, இதன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட சென்னையில், பிரியாணிக்கு என்றே புகழ் பெற்று விளங்கும் கடைகளில் ஒன்றாக இருப்பது ஹோட்டல் புகாரி என்று சொல்லப்படுகிறது. எனினும், சமீப நாட்களாக அந்த கடையின் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள புகாரி ஹோட்டல் மீது புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது, கஷ்டமர் ஒருவர் அந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று இருக்கிறார். அவருக்கு, பரிமாறப்பட்ட பிரியாணியில் தலைமுடி இருந்துள்ளது. இதனை, பார்த்த அவர் எனக்கு இந்த பிரியாணி வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எனினும், உணவு பரிமாறிய ஊழியர் அதுகுறித்து கவலைப்படாமல் சாப்பிட்டால் சாப்பிடு என்ற ரீதியில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, அந்த ஊழியர் மற்ற கஷ்டமர்களை கவனிக்க சென்று இருக்கிறார். இதில், கொடுமை என்னவென்றால், மற்றொரு கஷ்டமருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் தலைமுடி இருந்துள்ளது. இதையடுத்து, முன்பு புகார் தெரிவித்த அந்த நபர் நேரடியாக சமயலறைக்கு சென்று இருக்கிறார். அந்தவகையில், அங்கு இருந்த பிரியாணி அண்டாகள் மூடப்படாமலும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதை அவர் பார்த்துள்ளார். மேலும், அங்கிருந்த இறைச்சியின் மீது ஈக்கள் மொய்து இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். இதையடுத்து, அந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it