பிரிவினைவாதத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்

பிரிவினைவாதத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்

Share it if you like it

பிரிவினைவாதத்தை தூண்டும் ஜெகத் கஸ்பர்

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டை நாம் கொண்டாடி வரும் இந்த வேளையில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதே, நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான ஆங்கிலேயர்கள், நமக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி, எப்போதும் கொதி நிலையிலேயே இருக்க, சில விஷ விதைகளை தூவிச் சென்றனர். அந்த விதைகள் வளர்ச்சி பெற்று மரமாகி, தற்போது பிரிவினைவாதம் பேசுவது அதிர்ச்சியாக உள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய உரை :

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர், மக்களை சாதி ரீதியாகவும், மதம் சார்ந்த ரீதியாகவும் பிளவு படுத்தும் நோக்கத்துடனே பல கருத்துக்களைப் பேசினார்.

அதில், “இஸ்லாமிய மக்களும், ஆதிக்குடி மக்களும் சேர்ந்து 42 சதவீதம் பேர் இருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து, இந்திய நிலப் பரப்பில் 40 சதவீதம் என தனியாக அவர்களுக்கு என்றே, பிரித்துக் கேட்க வேண்டும்.

இஸ்லாமியர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு என தனியாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா அளவிற்கு நிலம் வழங்கப் பட வேண்டும். ஒருவேளை இந்தியாவில் இடமில்லை என்றாலும், சகாரா பாலை வனத்தையாவது பிரித்துக் கொடுக்க வேண்டும்.

உலகில் மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன, அந்த 57 இஸ்லாமிய நாடுகளுக்கும் செல்லுங்கள், அவர்களைக் கொண்டு ஐக்கிய நாடுகள் அவையில் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இஸ்லாமியர்கள் கொண்டு வர வேண்டும், வெளி நாட்டின் ஆதரவை நாட வேண்டும்.

குறைந்தபட்சம் இஸ்லாமியர்கள், “தனி வாக்காளர்” அந்தஸ்தை (Seperate Electorate) கேட்க வேண்டும். காந்தி, அம்பேத்கரை ஏமாற்றி விட்டார். காந்தியின் “எமோஷனல் பிளாக்மெயிலுக்கு” அம்பேத்கர் பணிந்து விட்டார். இஸ்லாமியர்கள் தனித் தொகுப்பு தேர்தல் முறையை கேட்க வேண்டும்”, என மக்களை பிளவு படுத்தும் நோக்கத்துடனே பேசினார், ஜெகத் கஸ்பர்.

பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் ஓரு பாதிரியார் பேசுவது, இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ், உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., அகஸ்டின் ஜெபக்குமார், ஜார்ஜ் பொன்னையா போன்ற பலரும் அவ்வாறு மக்களை பிளவு படுத்தும் வகையில் பேசி உள்ளனர்.

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸின் உரை :

2020 ஆம் ஆண்டில், கிறிஸ்தவ மதம் சபைக் கூட்டத்தில் பேசிய கிறிஸ்தவ மதத்தின் போதகர் மோகன் சி லாசரஸ் அவர்கள், ” 38 ஆயிரம் பெந்தகோஸ்து திருச்சபைகள் உள்ளதாகவும், அதில் 60 லட்சம் பேர் விசுவாசிகளாக இருப்பதாகவும், சபையைச் சேர்ந்த ஒருவர் மற்ற மதத்தை சேர்ந்த ஒருவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினால் போதும், விரைவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவார்கள் எனவும், இது போன்ற செயல்களை தொடர்ந்து மூன்று வருடங்கள் செய்தால், அதி விரைவில் தமிழகமே கிறிஸ்துவ மயமாகி விடும்” எனக் கூறியது தமிழக மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், ஒற்றுமையாக வாழும் தமிழர்களிடையே, இந்த பேச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

கிறிஸ்தவ மத போதகர் உமாசங்கர் :

அரசுப் பணிகளில்  இருந்து கொண்டே, மதப் பிரச்சாரம் செய்தார் உமாசங்கர் என்ற செய்தியும் பத்திரிகையில் வெளி வந்து உள்ளன.

ஜார்ஜ் பொன்னையாவின் உரை :

2021 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் கன்னியாகுமரியில் உள்ள அருமனையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவர்கள், “2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்ட பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது, “கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை” எனவும், “கிறிஸ்தவர்கள் கண் அசைத்தால் தான், திமுகவிற்கு ஓட்டு விழும்” எனவும், பாரத மாதாவை அவமானப் படுத்தும் எண்ணத்தில் தான், ஷூ போட்டு இருப்பதாகவும்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 62 சதவீதமாக மாறி உள்ளது எனவும், மிக விரைவில் அது 70 சதவீதமாக மாறும் எனவும், தமிழக சட்டசபை சபாநாயகர் பற்றியும், மத்திய உள்துறை அமைச்சர் பற்றியும், பாரத பிரதமரைப் பற்றியும் மிகவும் அவதூறானக் கருத்துக்களை எடுத்து உரைத்தார்.

எஸ்றா சற்குணத்தின் உரை :

2020 ஆம் ஆண்டில் பேசிய பேராயர் எஸ்றா சற்குணத்தின் பேச்சு, இந்துக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது, “இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து, குத்த வேண்டும். ரத்தம் வர வேண்டும் எனவும், இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு எனவும், 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்ற ஒரு மதமே கிடையாது எனவும், மதம் மாற்றுவதே நமது பணி அதற்காக மனிதர்களை பிடிப்பதே நமது வேலை எனவும், கிறிஸ்துவிற்காக மக்களை நாடுவதே நமது பணி எனவும், இதனை விட மேலானதொருப் பணி வேறு எதுவும் இல்லை என”, அவதூறானக் கருத்துக்களை எடுத்து உரைத்தார்.

இவர்களைப் போலவே சில அரசியல் கட்சி தலைவர்களும், இந்து மதம் சார்ந்த கடவுள்களையும், இந்து மதம் சார்ந்த சிற்பங்களையும் மிக இழிவாக விமர்சனம் செய்து, மேடைகளில் பேசி வருகின்றனர். இவர்களின் பேச்சை தட்டிக் கேட்டு, சமூகத்தில்  நிலவும் பதட்டத்தைத் தணிக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நமது நாடு “மதச் சார்பற்ற நாடு” என அரசியல் அமைப்பில் உள்ளது. அவ்வாறு இருந்தும்,  இந்து மதத்தை மட்டுமே எப்போதும் குறி வைத்து தாக்குவது ஏன்? அதையும் தாண்டி, மதம் ரீதியாக, சாதி ரீதியாக நமது நாட்டை துண்டாக்க, தற்போது சிலர் பேசி வருவது, சமூகப் பதட்டத்தை உருவாக்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது

நமது நாட்டைத் துண்டாட நினைத்த ஆங்கிலேயர்கள், ஒன்று பட்ட அகண்ட பாரதத்தை, பல கூறுகளாக பிரித்து விட்டுச் சென்றனர். இப்போதும் அதே சிந்தனையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் போன்ற பலரும் பேசி வருவது, நாட்டு மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவரையும் நினைத்துப் பார்த்து, பிரிவினைவாதம் பேசும் ஜெகத் கஸ்பர் போன்ற பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு,  அப்புறப்படுத்த வேண்டும்.

அதிலும் அனைவர் முன்னிலையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டி, மக்களை வேற்றுமைப் படுத்தி, சாதி ரீதியாக பிளவு உண்டாக்கி, பிரிக்க நினைக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை நிராகரிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக  இருந்து வருகின்றது.

செல்வம் நிறைந்த இந்துஸ்தானம் – அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்

வாழும் குமரி முனை பாப்பா

கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

வேதமுடைய திந்த நாடு – நல்ல

வீரர் பிறந்த திந்த நாடு

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்

தெய்வமென்று, கும்பிடடி பாப்பா –மகாகவி பாரதியார்

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it