செந்தில்பாலாஜியை சம்பவம் செய்த நெட்டிசன்கள்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ வைரல்!

செந்தில்பாலாஜியை சம்பவம் செய்த நெட்டிசன்கள்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ வைரல்!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜியை கேலி, கிண்டல் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

செந்தில்பாலாஜி ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு, அ.தி.மு.க.வுக்கு வந்தது முதல், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்தும், கருணாநிதி மற்றும் கோபாலபுரத்தை இகழ்ந்தும் பேசியது, பின்னர் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்குச் சென்றது, மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வசனம் பேசியது, பிறகு தி.மு.க.வில் இணைந்தது, தேர்தலின்போது மணல் கடத்தலுக்கு ஆதரவாக பேசியது, அமைச்சரானது மற்றும் மின் தடை குறித்து விளக்கம் அளித்தது, டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது, தற்போது நடந்த வருமான வரித்துறை ரெய்டு வரை வச்சு செய்திருக்கிறார்கள்.

மேலும், வீடியோவுக்கு இடையிடையே வடிவேலு காமெடியையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரானவர்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், இந்த வீடியோ அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு சிரித்து சிரித்து 100 சதவிகிதம் வயிற்று வலி வருவது உறுதி… வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it