அடுக்கடுக்காக கிடுக்கிப்பிடி கேள்விகள்… தெறிக்கவிட்ட செய்தியாளர்கள்… பதிலளிக்க திணறிய செந்தில்பாலாஜி!

அடுக்கடுக்காக கிடுக்கிப்பிடி கேள்விகள்… தெறிக்கவிட்ட செய்தியாளர்கள்… பதிலளிக்க திணறிய செந்தில்பாலாஜி!

Share it if you like it

டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதால், பதிலளிக்க முடியாமல் திணறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ஒளிவு மறைவின்றி நிர்வாகம் நடந்து வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர் ஒருவர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள், கேட்டால் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களே, கரூர் கம்பெனிதான் வாங்கச் சொல்கிறார்கள் என்று சொல்கிறார்கள் என்றார். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியோ, பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்காதீர்கள். எந்தக் கடை என குறிப்பிட்டுச் சொல்லுங்கள் என்றார்.

இதைத் தொடர்ந்து அந்த செய்தியாளர், எல்லா கடைகளிலுமே அப்படித்தான் வாங்குகிறார்கள். என்னுடன் டூவீலரில் வந்தால், நானே அழைத்துச் சென்று காட்டுகிறேன் என்றார். ஆனால், அக்குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்த நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவருமே, எல்லா கடைகளிலும் 10 ரூபாய் அதிகமாகத்தான் வாங்கப்படுகிறது என்றனர். ஆனாலும் அசராத அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைவா, நான் சொல்றத மொதல்ல கேளுங்க. கேள்விக்கு பதில் சொல்ல விடுங்க என்றவர், எந்தக் கடையில 10 ரூபாய் அதிகம் கேட்டாங்க? என்று கேள்வி எழுப்பினார்

இதற்கு செய்தியாளர், எல்லாக் கடைகளிலும் என்று மீண்டும் சொல்ல, அமைச்சர் செந்தில்பாலாஜியோ, 5,000 கடைகளுக்கும் சென்று பாட்டில் வாங்கினீர்களா? என்று கேட்டார். மேலும், டாஸ்மாக் கடைகளில் தவறுகள் இருந்தால் கடை எண்ணை குறிப்பிட்டு புகார் சொன்னால் நிச்சயமாக விசாரிப்போம். இதுவரை 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகார் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் ஆய்வு நடத்த அதிகாரிகள் அனுப்பப்பட்டு, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறி, ஒரு வழியாக சமாளித்து விட்டுச் சென்றார்.


Share it if you like it