புதுக்கோட்டை கலெக்டர் இல்லத்தில் இருந்து பழங்கால விநாயகர் சிலை அகற்றப்பட்டிருக்கும் சம்பவம் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
புதுக்கோட்டை கலெக்டர் இல்லத்தின் நுழைவு வாயில் முன்பு, சுமார் 60 ஆண்டுகளாக வினை தீர்க்கும் விநாயகர் சிலை இருந்து வந்தது. இந்த சூழலில், புதுகை கலெக்டராக மெர்ஸி ரம்யா என்பவர், கடந்த மே மாதம் 22-ம் தேதி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், மேற்கண்ட விநாயகர் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. மேலும், அச்சிலை சேதமடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதான் ஹிந்துக்கள் மத்தியிலும், ஹிந்து அமைப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன.
இதுகுறித்து ஹிந்து அமைப்பினர் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அதில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மெர்ஸி ரம்யா செய்தய முதல் காரியம் என்ன தெரியுமா? சுமார் 60 ஆண்டு காலமாக ஆட்சியர் பங்களாவின் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும் விநாயகரை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியதுதான். பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறிய கலெக்டர், தனது அலுவலர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும்படி செய்தார்.
அலுவலர்கள் விநாயகர் சிலையை அகற்றும்போது, சிலை சிதிலமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். அதில், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று எவருமே பழமையான, தொன்மையான கலெக்டர் பங்களாவில் எதையும் நீக்கும் ஈனச்செயலை செய்யவில்லை. கலெக்டர் பங்களா அவரது சொந்த வீடு கிடையாது. மேலும், தொன்மை வாய்ந்த கட்டடத்தில் எதையும் மாற்றவோ, நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது. இருந்தும் இவ்வாறு சாமி சிலையை அடியோடு அகற்றியது, மெர்ஸி ரம்யாவின் ஆழமான மதவெறியை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதேசமயம்,, ஆட்சியர் பங்களாவைச் சேர்ந்தவர்களோ, பங்களாவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருவதால், அதற்குத் தோதாக பிள்ளையார் சிலையை வேறு இடத்தில் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.