இந்தா ஆரம்பிச்சுட்டானுங்கள்ல… பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அராஜகம்!

இந்தா ஆரம்பிச்சுட்டானுங்கள்ல… பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அராஜகம்!

Share it if you like it

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால், காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. டெல்லியில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவுடன்தான் கெஜ்ரிவால் ஆட்சியை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. குறிப்பாக, பஞ்சாப்பில்தான் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அதிகளவில் இருக்கிறார்கள். அந்த வகையில், நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த நடிகர் பகவத் மான் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். பதவியேற்று 3 மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் அராஜகம் ஆரம்பித்து விட்டது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை கண்டித்து சிவசேனா அமைப்பு சார்பில் இன்று காலையில் பேரணி நடந்து. அப்போது, அப்பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த காலிஸ்தான் ஆதரவு நபர்கள், சிவசேனா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பதிலுக்கு சிவசேனா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இரு தரப்பினரும் கற்களை வீசியும், ஆயுதங்களாலும் தாக்கி கொண்டதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் லோக்கல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் இரு தரப்பினரும் ஒருவரை தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருக்கிறது. இத்தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் சிங், “பாட்டியாலாவில் நடைபெற்றது மிகவும் வருந்ததக்க சம்பவம். காவல்துறை டி.ஜி.பி.யிடம் இதுகுறித்து கேட்டறிந்தேன். அங்கு தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் அமைதியை யாரும் சீர்குலைக்கவிட மாட்டோம். பஞ்சாப் மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியே எங்களுக்கு எப்போதும் முன்னுரிமை” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it