சுதந்திரப் போராட்ட வீரர் சிவராம் ராஜகுரு

சுதந்திரப் போராட்ட வீரர் சிவராம் ராஜகுரு

Share it if you like it

சிவராம் ராஜகுரு என்பவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவர்.

1931-ல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 22 தான்!

ராஜகுரு செய்த குற்றம் என்ன? ஒரு சிறுவனைத் தூக்கிலிட்டுக் கொல்லும் அளவிற்கு அவன் செய்த தவறு என்ன?

போலீஸ் அதிகாரி John Sanders-ஐ 17/12/1928 அன்று லாஹூரில் கொலை செய்ததுதான்.

இதில் முதல் குற்றவாளி பகத் சிங். ராஜகுரு,
ஸுக்தேவ் சிங்,
சந்திரசேகர் ஆஸாத் ஆகிய மூவரும் இந்தக் குற்றத்திற்குத் துணை.

கொலை செய்யக் காரணம்?

இங்கிலாந்திலிருந்து இந்தியாவை ஆட்சி செய்து வந்த ஆங்கிலேய அரசு இந்தியாவில் நிலவும் அரசியல் நிலைமையைக் கண்டு மிகவும் கவலை கொண்டிருந்தது. பெருகிவரும் சுதந்திர உணர்வும் அதன் அடிப்படையிலான மக்கள் போராட்டங்களும் அதிகரித்த நிலையில் இருந்தது.

உண்மையான அரசியல் நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ள John Simon என்பவரின் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. இது பின்னாளில் ஸைமன் கமிஷன் என்று பெயர் பெற்றது.

நிலைமையை அறிந்து கொள்ள, சைமன் கமிஷன் ஆங்கிலேயரை மட்டுமே விசாரித்தது. இந்தியர்களுடைய கருத்துக்களைக் கேட்கவில்லை.

இது ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதே என்று இந்திய அரசியல் தலைவர்கள் வெகுண்டார்கள். நாடெங்கிலும் சைமன் கமிஷனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.

சைமன் கமிஷன் விசாரணை செய்ய எங்கு சென்றாலும் அங்கெல்லாம் போராட்டம் நடந்தது.

30 அக்டோபர் 1928 அன்று
லாஹூரில் சைமன் கமிஷன் விசாரணை நடத்திய போது, அங்கு இந்திய விடுதலைப் போராளி லாலா லஜ்பத் ராய் அமைதிப் போராட்டம்
நடத்தினார்.

போராட்டம் அமைதியாக நடந்த போதும் கூட, அங்குள்ள போலீஸ் கமிஷனர் கோபம் கொண்டு, கடுமையான தடியடிப் பிரயோகம் செய்ய உத்தரவிட்டார். போலீஸ் தடியடியில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் காயம் உற்றனர்.

மிக அதிகமாகக் காயமுற்ற லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்து, பிறகு மரணம் அடைந்தார்.

ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளைப் பல்வேறு இடங்களில் கண்ணுற்றுக் கொதித்துப் போயிருந்த இளைஞர்கள் சமுதாயம், லாலா லஜ்பத் ராயின் மரணத்தைக் கண்டு கடும் கோபம் கொண்டது. வஞ்சம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தது.

போலீஸ் கமிஷனரைச் சுட்டுத் தள்ளுவதே இதற்குச் சரியான பதிலடியாக இருக்கும். திட்டம் தீட்டப்பட்டது. நிறைவேற்றப்பட்டது.

ஆனால்….
போலீஸ் கமிஷனர் தப்பித்துக் கொண்டார். உதவி போலீஸ் கமிஷனர் சுட்டுக் கொல்லப் பட்டார்.

ஆங்கிலேய அரசு இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தனிமனிதத் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருந்த காலம் அது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசு விரும்பியது.

ஜான் சாண்டர்ஸைக் கொலை செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுத்தால் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் குறைந்துவிடும் என்பது ஆங்கிலேய அரசின் எண்ணம்.

இரண்டு வருடத் தேடலுக்குப் பிறகு முதல் மூவரும் பிடிபட்டார்கள். லாகூருக்கு அழைத்து வரப்பட்டார்கள். விசாரணை முடிந்தது. தீர்ப்பு வந்தது. தூக்கு தண்டனை.

மூவரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

அலகாபாத் நகரில் Alfred Park-ல் சந்திரசேகர் ஆசாத் சுற்றி வளைக்கப்பட்டார். தன் நண்பனைக் காப்பாற்றி அனுப்பி, தான் தப்பிக்க முடியாது என்று தெரிந்ததும், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் ஆசாத்.

கொஞ்சமும் கருணையின்றி
மூன்று இளைஞர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது
ஆங்கில அரசின் மனசாட்சியையோ தோழமை நாடுகளின் மனசாட்சியையோ உறுத்தவில்லை.

ஆனால் இந்த சம்பவம் இந்திய மனசாட்சியை உலுக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பொது மக்கள் மத்தியிலும் கூட நேரு காந்தி போன்ற பெருந்தலைவர்கள் மீது அதிருப்தி உருவாகியது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமே நேரு காந்தி தான் என்று கூறும் அளவிற்கு இந்த இரு தலைவர்களின் மீதும் நாட்டு மக்களுக்கு வெறுப்பு அதிகமாகியது.

ஜவஹர்லால் நேருவும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் நினைத்திருந்தால் ஆங்கிலேய அரசுடன் பேரன் பேசி இந்த நான்கு சிறுவர்களையும் காப்பாற்றி இருக்கலாமே? ஏன் காப்பாற்றவில்லை?

இந்த இளைஞர்கள்
நேரு காந்தி இருவருடனும் தொடர்பில் இருந்தார்கள்.

மாபாதகச் செயல்கள் செய்யக்கூடாது. வன்முறை செய்யக்கூடாது. அஹிம்சா வழியிலேயே சுதந்திரம் பெற வேண்டும் என்றெல்லாம் இருவரும் இந்த இளைஞர்களுக்கு உபதேசம் கூறி இருந்தார்கள். ஆனால் இளைஞர்கள் இந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

காந்தி மட்டும் ஒரே ஒரு முறை ஆங்கிலேயரைத் தொடர்பு கொண்டு இவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக ஒரு குறிப்பு உள்ளது.

திரு.வாசுதேவ ஐயர்


Share it if you like it