மாணவர்கள் அடிக்கும் காலம்… ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தான் வேண்டும்… பொன்முடி ரிப்பீட்டு!

மாணவர்கள் அடிக்கும் காலம்… ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தான் வேண்டும்… பொன்முடி ரிப்பீட்டு!

Share it if you like it

ஆசிரியர்கள் பிரம்பை எடுத்து மாணவர்களை அடிக்கும் காலம் மாறி, தற்போது மாணவர்கள் பிரம்பை எடுத்து ஆசிரியர்களை அடிக்கும் காலமாக இருக்கிறது. ஆகவே, ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்துகொண்டு பாடம் சொல்லித்தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியையும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சையாகப் பேசுவதில் பொன்முடியை மிஞ்ச ஆள் கிடையாது. பெண்களின் இலவச பயணத்தை ஓசி பஸ் என்று கேலி செய்தது முதல், நீ என்ன எனக்கா ஓட்டுப்போட்டா என்று கேட்டதுவரை அவரது அலப்பறைகளுக்கு அளவே இல்லை. இந்த சூழலில், தற்போது ஆசிரியர்கள் மாணவர்களிடம் அடி வாங்கித்தான் ஆக வேண்டும் என்கிற ரீதியில் பேசி மீண்டும் புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார். இந்த சூழலில்தான், பொன்முடி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் பொன்முடி, கல்வி வளர வேண்டும். அது ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. நாங்கள் என்னதான் மேடையில் பேசிவிட்டுச் சென்றாலும், மாணவர்களுக்கு சொல்லித் தரப்போவது நீங்கள்தான். ஒருகாலத்தில் ஆசிரியர்கள் பிரம்பை எடுத்து மாணவர்களை அடிப்பார்கள். தற்போது, மாணவர்கள் பிரம்பை எடுத்து ஆசிரியர்களை அடிக்கும் காலமாக இருக்கிறது. இது காலத்தின் மாற்றம். ஆகவே, ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்துகொண்டு பாடம் சொல்லித்தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த பேச்சுதான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, இவரது பேச்சு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொன்முடியின் பேச்சு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக இருப்பதோடு, மாணவர்களை ரவுடிகளாக மாற்றும் வகையில் இருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.


Share it if you like it