உயிர் காக்கும் அமுதமான சிறுதானியங்கள் – நடப்பாண்டை சிறுதானிய ஆண்டாக கௌரவப் படுத்திய உலக சுகாதார நிறுவனம்

உயிர் காக்கும் அமுதமான சிறுதானியங்கள் – நடப்பாண்டை சிறுதானிய ஆண்டாக கௌரவப் படுத்திய உலக சுகாதார நிறுவனம்

Share it if you like it

இயற்கையோடு இணைந்த உடலியல் மொழி உணர்ந்து உடல் பலமும் ஆரோக்கியமும் தரவல்ல ஆரோக்கிய பாதையில் இருந்து விடுபட்டு நவநாகரீகம் என்ற பெயரில் துரித உணவு பொட்டல உணவு என்று மாறி குறுகிய காலத்தில் தங்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சிதைத்துக்கொண்ட உலகம் உண்மை உணர்ந்து தற்போது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பாரம்பரிய உணவு முறை இயற்கை மருத்துவ முறைகள் உடல் ஆரோக்கியம் ஆயுள் காக்கும் உடலியல்கள் என்று இயற்கையை நோக்கி திரும்புகிறது .இந்த இயற்கையின் ஆயுள் ஆரோக்கிய மொழிகளை எல்லாம் உலகிற்கு வழங்கிய பாரதத்தை நோக்கி வேகமாக நகர்கிறது இயற்கையோடு இணைந்த வாழ்வையும் பாரம்பரியமான உணவுகள் மறுந்தியலையும் உலகிற்கு வழங்கிய பாரதம். தனது பூர்வீக மண்ணில் இருந்தே கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கு போய்விட்ட உயிர் வளர்க்கும் அமுதமான சிறுதானியங்கள் என்ற அமுதத்தை மீண்டும் மீட்டெடுக்க தொடங்கி இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக விவசாயத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு தேவையாக நீர் நிலை பாதுகாப்பு மற்றும் நதிநீர் இணைப்பு என்று பல உட் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டது. விவசாயம் சார்ந்த நலத்திட்டங்கள் கடன் உதவிகள் மானியம் என்று அனைத்தும் இலகுவாக்கப்பட்டது. மறுபுறம் உயிர் கொல்லும் விஷங்களை உணவின் ஊடே தெளிக்கும் வேதியியல் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விடை கொடுத்து இயற்கையான விவசாயத்தையும் பாரம்பரியமான முறையில் உரங்கள் பூச்சி விரட்டிகள் மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாரித்து பயன்படுத்தி அதன் மூலம் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க பெரும் பிரயத்தனம் செய்தது.

நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பவர்கள் அதற்கு தேவையான வாய்ப்புகள் கட்டமைப்பு செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கௌரவப்படுத்தியதோடு அவர்களுக்கு தேவையான மேம்பட்ட கட்டமைப்புகளையும் செய்து கொடுத்தது. விவசாய பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளை மேம்படுத்தி அதன் மூலம் இயற்கை விவசாயம் விவசாயம் பற்றிய ஆர்வம் ஈடுபாட்டை சந்ததிகள் மத்தியிலும் முன்னெடுத்தது. இதன் அடுத்த கட்டமாக அழிவின் விளிம்பில் நிற்கும் சிறு தானிய உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் மீட்டெடுப்பதற்காக முயற்சிகளை தொடங்கியது .

சில ஆண்டுகளுக்கு முன்பு புது தில்லியில் நாடு முழுவதும் உள்ள மகளீர் கைவினை பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழாவில் மகளிர் முன்னெடுத்த ஒரு பெரும் உணவுத் திருவிழாவில் பிரத்தியேகமாக நாடு முழுவதிலும் இருந்து விளையும் சிறு தானியங்களையும் அந்த சிறு தானியங்களின் மூலம் இயற்கையான உணவுகள் சார்ந்த ஆயுள் ஆரோக்கியம் காக்கும் உணவு பண்டங்களையும் காட்சிப்படுத்தியது.

பாரதத்தின் உணவு பாரம்பரியத்தையும் அதன் மகத்துவத்தையும் நாடும் உலகமும் அறிந்து கொள்ள கட்டமைப்பை மை அமைத்துக் கொடுத்ததன் தொடர்ச்சியாக நாடு முழுவதிலும் உள்ள மகளிர் தொழில் முனைவோர் முதல் உள்ளூரில் இருக்கும் சுய உதவி குழுக்கள் வரை இந்த சிறு தானியங்களை முன்வைத்து பல உணவு சார்ந்த தொழில்களையும் உற்பத்தி சார்ந்த தொழில்களையும் விவசாயத்திலும் இந்த சிறுதானிய உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்கள். அதற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும் சந்தைகளையும் சந்தைப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் மத்திய அரசு நாடு முழுவதும் முழு முனைப்போடு கொண்டு போய் சேர்த்தது . அதன் பலனாக தற்போது சிறு தானிய உற்பத்தியில் மீண்டும் நாடு முழுவதும் நடை போடும் பல்வேறு மாநிலங்கள் வெற்றி நடை போடுகிறது.இதில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

சிறு தானிய உணவு வகைகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு வரிசையில் அருகிப்போன அபூர்வ நெல் வகைகள் மீட்டெடுப்பது தொடங்கி வரகு சாமை குதிரைவாலி திணை கம்பு சோளம் மூங்கில் அரிசி என்று உடலுக்கு அளவற்ற அத்தியாவசிய சத்துக்களையும் உள்ளிருந்து உடல் உறுப்புகளை பலப்படுத்தும் தாதுக்களையும் அபரிமிதமாக வழங்கும் தானிய வகைகளை எல்லாம் நாடு முழுவதும் விவசாயிகள் கணிசமாக விளைவிக்க தொடங்கினார்கள்.

இன்று திரும்பிய பக்கமெல்லாம் சிறுதானிய உணவகங்கள் சிறுதானிய சிற்றுண்டிகள் என்று இயற்கை உணவகங்கள் பெருகி வருகிறது. உள்ளூர் உணவு திருவிழா முதல் சர்வதேச உணவு கண்காட்சி வரை இந்திய உணவும் சிறுதானிய உணவுகளும் ஆதிக்கம் செலுத்துகிறது. மறுபுறம் உள்நாட்டு சந்தையிலிருந்து வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை வரை சிறு தானியங்களுக்கும் சிறு தானியங்களை உள்ளீடாக வைத்து செய்யும் தின்பண்டங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் என்று ரக ரக வாரியாக சிறுதானியத்தின் பண்டங்கள் நாடு முழுவதிலும் இருந்து உலகம் முழுவதற்கும் போய் சேர்கிறது . இதன் மூலம் இந்திய இயற்கை விவசாயமும் இந்திய விவசாய பெருமக்களின் சிறுதானிய உணவுகளும் உலகையும் வாழவைத்து அவர்கள் வாழ்வையும் வளப்படுத்துகிறது.

இதன் மூலம் இந்த சிறு தானிய உணவுகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி சார்ந்த வாய்ப்புகளும் உள்ளூர் முதல் அயல்நாடுகள் வரை நல்ல சந்தைப்படுத்துதலும் கிடைக்கப்பெற்றது. விவசாயம் என்பது நஷ்டப்படும் தொழில் அல்ல. ஆட்சியாளர்கள் அக்கறையும் அரசாங்க உதவியும் வழிகாட்டுதலும் சரியான திட்டமிடலும் அர்ப்பணிப்புடன் கூடிய ஆர்வமும் இருந்தால் நிச்சயம் விவசாயம் கூட லாபம் கொடுக்கும் தொழில் தான் என்ற பாரம்பரியமும் மீட்க பட்டு விட்டது.

இந்த மீட்டெடுக்கப்பட்ட சிறுதானிய பாரம்பரியத்தை உரிய வகையில் கௌரவப்படுத்தும் விதமாக இன்று மத்திய அரசின் ராணுவம் துணை ராணுவம் உள்ளிட்ட உணவகங்கள் பல்பொருள் விற்பனை அங்காடி வரை இந்த சிறு தானிய உணவுப் பொருட்களும் உணவுகளும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு துறை விவசாயம் நலத்துறை சுகாதாரத்துறை சிறு குறு தொழில் வளர்ச்சி துறை என்று அனைத்து துறைகளும் இந்த சிறு தானிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் என்ற விஷயங்களுக்கு கூடுதல் முன்னுரிமை தருகிறது .

கடந்த காலங்களில் பொருட்காட்சியில் சிறு தானிய விற்பனை கூடத்தில் ஒரு பாக்குமர தட்டி சிறுதானிய பண்டங்களை வாங்கி அங்கேயே அமர்ந்து உட்கொண்டு அதன் பெருமிதத்தை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்த பாரத பிரதமர் இன்று நாடாளுமன்ற உணவகம் முதல் விமானம் ரயில்வே உள்ளிட்ட அனைத்து உணவகங்களிலும் கூட இந்த சிறு தானிய உணவுகளை புகுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி பெறும்போது இந்திய விவசாயத்தில் சிறு தானிய உற்பத்தி ஆதிக்கம் செலுத்துவதோடு நம் இந்திய உணவு பழக்கத்திலும் சிறுதானியங்கள் மீண்டும் உரிய இடத்தைப் பெறும் .

நாம் உண்ணும் இட்லி தோசை கோதுமை ரொட்டி அரிசி சாதம் வகைகள் என்று நம்முடைய உணவு பழக்கம் என்றாலும் கூழ் கஞ்சி நீராகாரம் பிட்டு இடியாப்பம் என்று நம் முன்னோர்கள் உண்ட உணவு பழக்கம் ஆனாலும் நவீன உணவுகள் என்ற பெயரில் நம் சந்ததிகள் உண்ணும் பீட்சா பர்கர் நூடுல்ஸ் சாண்ட்விச் வரை அனைத்து உணவுப் பொருட்களுக்கும் மூலமாக இருப்பது தானிய வகைகளும் பழங்கள் காய்கறிகள் கீரைகள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மட்டுமே. ஆனால் இந்த விளைப் பொருட்களை எந்த பொருளை எந்த விதமாக சமைத்து உண்பது எந்த சீதோசனத்தில் எதை உண்பது நலம் எதை தவிர்ப்பது நலம் என்று ஒரு பெரும் மருத்துவ ஆரோக்கிய பாரம்பரியத்தை கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வழியில் அவர்கள் வாழ்ந்ததினால் தான் பூரண ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று நோயற்ற வாழ்வை வாழ முடிந்தது.

அதை விட்டு ஓரளவு விலகி வந்தாலும் அபாய எல்லைக்கு போகாமல் இருந்ததனால் தான் நம் தலைமுறைகள் இன்றும் ஓரளவு ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடிகிறது .ஆனால் நவீன உணவுகள் என்ற பெயரில் அதீத வெப்பம் அல்லது சமைக்காமலே பச்சையாக உண்பது ஒன்றாக சேர்த்து சமைக்க கூடாத இரண்டு பொருட்களையும் சேர்த்து உருவாக்கும் உணவு பண்டங்கள் என்று உடலுக்கு தீங்கும் ஆரோக்கிய கேடும் விளைவிக்கும் உணவு பண்டங்களை துரித உணவுகள் பொட்டல உணவுகள் என்ற பெயரில் நம் தலைமுறைகள் உண்ண தொடங்கியதன் விளைவுதான் இன்று நம் சந்ததிகள் ஆயுள் ஆரோக்கிய சீர்கேட்டை மருந்தே உணவு மருத்துவமனையை வீடு என்ற அபாயமான வாழ்வை வாழ்வதற்கான முழு காரணம்.

நம் குழந்தைகள் நம் வீட்டில் சந்ததிகள் நம் குடும்பத்தின் வாரிசுகள் என்பதை கடந்து இந்த தேசத்தின் எதிர்காலம் அவர்களை என்பதை உணர்ந்து அவர்களின் ஆயுள் ஆரோக்கியம் பாதுகாப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். வளமான சந்ததிகள் கொண்ட ஒரு தேசமே வலுவான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டிருக்க முடியும் அந்த பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் நம் தேசம் குறைப்படாமல் அனுபவிக்க வேண்டும் எனில் நம் சந்ததிகள் நல்ல உணவு பழக்கம் ஆரோக்கியமான உடலியல் நோயற்ற வாழ்வியல் என்று பூரண ஆயுள் ஆரோக்கியம் கொண்ட ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட வேண்டும் அதற்கு உணவே மருந்து என்னும் நம் பாரம்பரிய வாழ்வியலையும் உடல் வளர்க்கும் அமுதமான சிறு தானிய உணவு பழக்கங்களையும் அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்தி அந்த வகையில் அவர்களை பழக்கி விட வேண்டும் ஒரு பெற்றோராக அது நமது முதல் கடமை. தேசத்தின் குடிமக்களாக அது நமது தேசிய கடமை.


Share it if you like it