மோர் குடிங்க MORE!

மோர் குடிங்க MORE!

Share it if you like it

மோருடன் எதை கலந்து குடித்தால் குணமாகும் நோய்கள்.:

கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும்.

மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும்.

ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும்.

புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.

பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

சீரகபொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும்.

முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.

கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும்.

வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு, தோல் நோய் குறையும்.

மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க இருமல் குறையும்.


Share it if you like it