7.WAR
தேச நலனுக்காக தனக்கு தானே தேச துரோகி பட்டத்தை கொடுத்துக்கொண்டு உண்மையான தேச துரோகிகளை கண்டுபிடிக்கும் ஒரு மிக சிறந்த ராணுவ உளவாளியின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சில விஷயங்களை கதைக்களமாக கொண்ட ஒரு திரைக்கதை.
6.தக்ஷகன் ஃபல்ஸ்இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லாலா பகதூர் சாஸ்திரி அரசுமுறை பயணமாக வெளிநாட்டிற்கு சென்று வரும்பொழுது இந்தியாவிற்கு இனிமையான செய்தியை கொண்டுவரப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் நாடுதிரும்பியது பிணமாகத்தான் அவருடைய மரணத்தில் உள்ள பல்வேறு சந்தேகங்களை வெளிகொண்டுவருவதே இந்த திரைப்படம்.
5.சைறா நரசிம்மா ரெட்டிஆந்திராவில் தன மனைவியையும், குழந்தையையும் பிரிந்து, தனிமனிதனாக ஆங்கிலேயரை எதிர்க்க துவங்கி அதை மிகப்பெரிய சுதந்திர போராட்டமாக மாற்றும் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சுதந்திர போராட்ட வீரரின் கதைதான் இது.
4.மிஷன் மங்கள்
பலரும் இயலாது என்று கூறியநிலையில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செவ்வாயை சென்றடையும் மங்கள்யான் செயற்கை கோளின் வெற்றிக்காக இந்திய விஞ்ஞானிகளின் சந்தித்த சவால்களைப்பற்றி விளக்கி. இந்தியனாக கர்வம் கொள்ள வைக்கும் ஒரு திரைப்படம் இது
3.கேசரி
10,000 ஆப்கானிய படைவீரர்களை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்து அதில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த வெறும் 21 சீக்கிய படை வீரர்களின் வீர சரித்திரத்தை உணர்த்தும் திரைப்படம் இது.
2.மணிகர்ணிகா
பாரதநாட்டில் இருந்து ஆங்கிலேயரை வெளியேற்ற தனியொரு பெண்ணாக படைக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட ஜான்சிராணி லக்ஷ்மிபாயின் கதை.
1.உரி20 இந்திய ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலை உணர்த்தி ராணுவ வீரர்களை நினைத்து நம்மை பெருமைகொள்ளச் செய்யும் அற்புதமான திரைப்படம் இது